"சூப்பர்".. சப்பாத்தி சுட்ட பில்கேட்ஸை பாராட்டிய பிரதமர் மோடி.. கூடவே சொன்ன சமையல் டிப்ஸ்! ஆஹா

சப்பாத்தி சுட்ட பில்கேட்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கிய பில்கேட்ஸ் சுட்ட சப்பாத்தி குறித்து பிரதமர் மோடி ஒரு அறிவுரையை கூறியுள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் பில்கேட்ஸ். பிரபலமான மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். அங்கு நிலவி வரும் சமூக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வுகளை காண முனைப்பு காட்டி வருகிறார்.

கேட்ஸ் பவுண்டேஷன்

கேட்ஸ் பவுண்டேஷன்

கேட்ஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி தனது சமூக சேவைகளை பில்கேட்ஸ் செய்து வருகிறார். இந்தியாவுக்கும் அடிக்கடி வரும் பில்கேட்ஸ் இங்கு அவர் சந்திக்கும் விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அவரது அனுபவங்களையும் கூறி வருகிறார். அந்த வகையில் பில்கேட்ஸ் இந்தியாவின் பாரம்பரிய உணவான சப்பாத்தியை சமைத்துள்ளார்.

சமையல் கலை நிபுணர்

சமையல் கலை நிபுணர்

முன்னணி சமையல் கலை நிபுணரான எய்டன் பிர்னத்துடன் இணைந்து பில்கேட்ஸ் சப்பாத்தி செய்துள்ளார். அண்மையில் சமையல் நிபுணர் பெர்னத் இந்தியா வந்தார். அப்போது அவர் பீகாரில் உள்ள உணவகங்களில் சப்பாத்தி தயாரிப்பை கற்றுக் கொண்டுள்ளார். அந்த உணவு தயாரிப்பது பிடித்து போகவே தனது அனுபவத்தை பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார்.

சப்பாத்தி

சப்பாத்தி

அதன்பேரில் இருவரும் இணைந்து சப்பாத்தி தயாரித்து ருசித்தும் பார்த்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பில்கேட்ஸ் சப்பாத்தி தயாரித்ததை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார். அத்துடன் பில்கேட்ஸுக்கு இன்னொரு உணவு தயாரிப்பு குறிப்பையும் பிரதமர் கொடுத்துள்ளார். மோடி தனது பதிவில் சூப்பர் இந்தியாவில் தற்போது டிரென்டாக உள்ளது சிறுதானிய உணவு வகைகள்தான்.

உணவு தானியங்கள்

உணவு தானியங்கள்

உடல்நலத்திற்கும் மிகச் சிறந்ததாகும். சிறுதானியங்களில் பல உணவு வகைகள் இருக்கின்றன. அவற்றையும் நீங்கள் சமைக்க முயற்சி செய்யலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளது. எனவே சிறுதானியங்களுக்கு பெயர் பெற்ற இந்தியாவில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள் என சொல்லும் போது சாமை, வரகு, குதிரைவாலி, திணை, கம்பு, சோளம் உள்ளிட்டவையாகும். இதில் கார்போரைட்ரேட்டுகளுக்கு பதிலாக நார்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் இதை உடல் எடை குறைக்க விரும்புவோரும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயுள்ளவர்களும் வயதானவர்களும் சாப்பிடலாம். இந்த சிறுதானியங்களை சாதமாக வடித்தும், கஞ்சி தயாரித்தும் சத்து மாவு செய்தும், பொங்கல் செய்தும் உப்புமா செய்தும் சாப்பிடலாம்.

அரிசி வகைகள்

அரிசி வகைகள்

இவை மட்டுமல்லாமல் அரிசி வகைகளிலும் கருப்பு கவுனி, வெள்ளை கவுனி, மூங்கில் அரிசி, குள்ளக்கார், மாப்பிள்ளை சம்பா, கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி, காட்டுயானம் அரிசி, அன்னமழகி , இலுப்பைப்பூ சம்பா அரிசி, கல்லுண்டை சம்பா, காடைச் சம்பா, காளான் சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. இவற்றில் நிறைய மருத்துவ குணங்களும் நோய் எதிர்ப்பாற்றலும் இருக்கிறது. இந்த அரிசியும் தற்போது மீண்டும் கிடைக்கின்றன. இதன் மருத்துவ குணங்களை அறிந்து நமது உடல்நிலைக் கேற்ப இந்த அரிசியை உண்டு மகிழலாம். இந்த அரிசிகள் உடல் எடை குறைப்பதற்கும், கேன்சர் செல்கள் உற்பத்தியாகாமல் இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் , ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+