மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி.. வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் பரிசு! பிரதமர் மோடி பெருமிதம்!
டெல்லி: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின் மூலம், வளர்ச்சி, நல்லாட்சி, சமூக நீதி ஆகியவை மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றுள்ளன எனவும், பொய்யும் வஞ்சகமும் படுதோல்வி அடைந்துள்ளது, மூன்று முறை பாஜகவுக்கு ஆட்சியை வழங்கிய நாட்டிலேயே ஆறாவது மாநிலம் மகாராஷ்டிரா என பெருமிதம் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் நேற்று முன் தினம் மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின. கடந்த 20ஆம் தேதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 220 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.
இதனையடுத்து மகாராஷ்டிரா டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். தொடர்ந்து அவருக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர்,"வளர்ச்சி, நல்லாட்சி, சமூக நீதி ஆகியவை மகாராஷ்டிராவில் வெற்றி பெற்றுள்ளன. பொய்யும் வஞ்சகமும் படுதோல்வி அடைந்துள்ளது. மகாராஷ்டிரா மக்களின் தீர்ப்பின் மூலம் இன்று எதிர்மறை அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இன்று மகாராஷ்டிரா வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பல மாநிலங்களின் இடைத்தேர்தல் முடிவுகளும் வந்துள்ளன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பாஜகவுக்கு பலத்த ஆதரவு அளித்துள்ளன. அசாம் மக்கள் மீண்டும் பாஜக மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேசத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. நாடு இப்போது வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறது என்பதை இது காட்டுகிறது.
ஹரியானா தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஒற்றுமை எனும் செய்தியை இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவில் நிரூபித்து இருக்கிறது. இந்த முறை மகாராஷ்டிரா அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் எந்தவொரு கட்சிக்கும் அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மகாராஷ்டிரா தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசி வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் மூன்றாவது முறையாக பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. தொடர்ந்து மூன்று முறை பாஜகவுக்கு ஆட்சியை வழங்கிய நாட்டிலேயே ஆறாவது மாநிலம் மகாராஷ்டிரா என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications