நடுக்காட்டில் மோடி.. கையில் துப்பாக்கி.. திரில் பயணம்.. வாய்விரிய வைக்கும் ஆச்சரியம்.. வாவ் டிஸ்கவரி
பிரதமர் மோடியின் Man vs Wild நிகழ்ச்சியின் புரொமோ வைரலாகி வருகிறது
Recommended Video
டெல்லி: நடுக்காட்டில் மோடியை யாராவது பார்த்திருக்கீங்களா.. இனி பார்க்க போறீங்க.. கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு மோடி காட்டுக்குள் செல்வதையும், காட்டுப் பகுதியில் இருக்கும் ஏரியில் படகில் செல்வதையும் இனிமேல் பார்க்கதான் போறீங்க!
உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆன சேனல்தான் டிஸ்கவரி சேனல். இதில் பாப்புலர் நிகழ்ச்சிதான் Man vs Wild என்ற நிகழ்ச்சி. இதற்கு உலகம் முழுக்க அப்படி ஒரு வரவேற்பு உள்ளது. இதற்கெல்லாம் ஒரே காரணம்
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்தான்.
இந்நிகழ்ச்சியின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், ரொம்பவும் ஆபத்தான, அல்லது மோசமான சூழலில் ஒருத்தர் தனியாக மாட்டிக்கொண்டால், அங்கிருந்து எப்படி தப்புவது என்பதுதான் இதன் கான்செப்ட். பார்ப்பதற்கே ரொம்ப த்ரில்லாக இருக்கும் நிகழ்ச்சி இது.

குழந்தைகள்
அதனால் உலகம் முழுக்க, இளைஞர்களும், குழந்தைகளும் இதனை விரும்பி பார்ப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே ஒபாமா உட்பட ஏராளமான பெர்சனாலிட்டிகள் பங்கேற்று இருக்கிறார்கள். அந்த வரிசையில் நம் நாட்டு சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதற்கான புரோமோதான் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

செம வைரல்
இந்த ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது செம வைரலாகியுள்ளது. பலரும் இதை ஷேர் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதை விட முக்கியமானது.. ஸ்டைலிஷ் மோடி.. ஆ.. நம்ம பிரதமரா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கலக்கலாக காணப்படுகிறார் மோடி. இந்தியிலும் பேசியுள்ளார். நமக்கெல்லாம் தெரிந்த ஸ்டைலிஷ் பிரதமர் ராஜீவ் காந்திதான். அவரைத் தூக்கி சாப்பிட்டு விடுவார் போல மோடி.
|
துப்பாக்கி
இந்தியாவில் வன விலங்குகளின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக இந்த நிகழ்ச்சியில் நம் பிரதமர் கலந்து கொண்டுள்ளார். இதில் பியர் கிரில்ஸ் உடன் மோடி காரில் செல்கிறார், பிறகு காட்டுக்குள் நடந்து போகிறார், கையில் துப்பாக்கியை வைத்துள்ளார், படகில் செல்கிறார்.. இப்படி வித்தியாசமான ஷாட்-கள் அந்த புரொமோவில் உள்ளன. நடுநடுவே, சிங்கம் கர்ஜிக்கிறது.. புலி உறுமுகிறது.. தினுசு தினுசான சத்தங்களை கேட்க முடிகிறது.

திரில் + தில்
வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி ராத்திரி 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த புரொமோவை பார்த்ததுமே, பிரதமர் மோடியின் திரில் + தில்லான நிகழ்ச்சியை பார்க்க நமக்கு அலாதி ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications