Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அமைச்சர்கள் யார் யார்? சஸ்பென்ஸ் உடைத்த பிரதமர் மோடியின் இல்ல ‛‛டீ பார்ட்டி’’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு மோடி தனது இல்லத்தில் மத்திய அமைச்சராகப்போகும் எம்பிக்களுக்கு தேநீர் விருந்தளித்தார். இந்த தேநீர் விருந்தின் பங்கேற்றவர்கள் மூலம் மத்திய அமைச்சராகப்போகும் தலைவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி அமித்ஷா முதல் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2014, 2019 ஆண்டுகளை தொடர்ந்து மீண்டும் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். கடந்த 2 முறை பாஜகவுக்கு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. ஆனால் இந்த முறை தனிப்பெரும்பான்மையான 272 எம்பிக்கள் கிடைக்கவில்லை.

narendra modi oath ceremony bjp nda cabinet ministers union ministry politics

பாஜகவுக்கு 240 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் இன்று புதிய ஆட்சிஅமைகிறது. பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமாக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில் தான் மோடியின் புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் எம்பிக்கள் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணி கட்சிகள் தங்களுக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகளை கேட்டு கோரிக்கை வைத்துள்ளன. இதனால் இன்று பாஜக எம்பிக்களுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்பிக்களும் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். முதற்கட்டமாக இன்று பிரதமர் மோடியுடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இன்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்பிக்களுக்கு டெல்லியில் உள்ள இல்லத்தில் வைத்து பிரதமர் மோடி டீ பார்ட்டி (தேநீர் விருந்து) வழங்கினார். . இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த டீ பார்ட்டி நடைபெற்றது. இந்த டீ பார்ட்டியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, சர்பானந்த் சோனோவால், சிவ்ராஜ்சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா, உள்பட மேலும் சிலர் பங்கேற்றனர்.

அதேபோல் கூட்டணி கட்சிகளை பொறுத்தமட்டில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த லாலன் சிங், பிரதாப் ராவ் ஜாதவ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, பெம்மாசானி சந்திரசேகர், எல்ஜேபி கட்சியின் சிராக் பஸ்வான், ஆர்ஜேடியின் ஜெயந்த் சவுத்ரி, ஏஜேஎஸ்யூ கட்சியின் சந்திரசேகர் சவுத்ரி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இவர்கள் மத்திய அமைச்சர்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த பட்டியலில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு டீ பார்ட்டியில் பங்கேற்கும்படி போன்கால் சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும் தற்போது வரை அமைச்சரவையில் இடம்பெற உள்ள தலைவர்களின் பெயர்களின் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால் யார் யார் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதோடு இன்றைய தினம் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் தலைவர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி

ராஜ்நாத் சிங் பா.ஜ.க
நிதின் கட்கரி பா.ஜ.க
அர்ஜுன் ராம் மேக்வால் பாஜக
சிராக் பாஸ்வான் எல்ஜேபி
எச்.டி.குமாரசாமி ஜே.டி.(எஸ்)
சர்பானந்தா சோனோவால் பாஜக
பிரகலாத் ஜோஷி பாஜக
சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க
சந்திர சேகர் பெம்மாசானி தெலுங்கு தேசம்
ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு தெலுங்கு தேசம்
ராம்நாத் தாக்கூர் ஐக்கிய ஜனதாதளம்
லாலன் சிங் ஐக்கிய ஜனதாதளம்
பிரதாப் ராவ் ஜாதவ் சிவசேனா
கே அண்ணாமலை பா.ஜ.க
அமித் ஷா பா.ஜ.க
ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க
எம்எல் கட்டார் பா.ஜ.க
சந்திரசேகர் சௌத்ரி AJSU
ஜெயந்த் சவுத்ரி ஆர்.ஜே.டி
மன்சுக் மாண்டவியா பா.ஜ.க
அஸ்வினி வைஷ்ணவ் பாஜக
பியூஷ் கோயல் பா.ஜ.க
கிரண் ரிஜிஜு பா.ஜ.க
ரக்ஷா காட்சே பாஜக
கமல்ஜீத் செராவத் பா.ஜ.க
ராவ் இந்தர்ஜித் சிங் பா.ஜ.க
ராம்தாஸ் அத்வாலே இந்திய குடியரசுக் கட்சி
ஜிதன் ராம் மஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா
கிரிராஜ் சிங் பா.ஜ.க
பாண்டி சஞ்சய் பா.ஜ.க

அண்ணாமலை அமைச்சர்: இன்று பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அமைச்சராக பதவி ஏற்க வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+