திடீரென மணிலா கிளம்பிய மோடி.. உலகமே உற்று கவனிக்கும் ASEAN மாநாடு! இந்தியாவின் முக்கிய திட்டம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று நவம்பர் 16ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நவம்பர் நாளை 17ஆம் தேதி நடைபெறவுள்ள 23வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த பயணத்தின்போது கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
11 உறுப்பு நாடுகளை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் (ASEAN) அமைப்பின் தற்போதைய தலைமை பொறுப்பை பிலிப்பைன்ஸ் வகிக்கிறது. இதையொட்டி மணிலாவில் உச்சி மாநாட்டை அந்நாடு நடத்துகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் மணிலா சென்றுள்ளனர்.

பிலிப்பைன்ஸ்
அதன்படி பிரதமர் மோடியும் இப்போது பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இதற்காக இன்றைய தினம் அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிலாவுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நவம்பர் நாளை 17ஆம் தேதி நடைபெறவுள்ள 23வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 21வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
உலக தலைவர்களுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அளிக்கும் விருந்திலும் மோடி கலந்துகொள்கிறார். மேலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளார்.
வெளியுறவு கொள்கை
பயணத்துக்கு முன்பாக இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆசியான் அமைப்புடனான உறவு இந்தியாவின் Act East Policy மையமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவின் 'மஹாசாகர்' திட்டத்திலும் இந்த பார்டனப்ஷிப் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் நாகரிக பரிமாற்றங்களின் அடிப்படையில் உருவானது என்றும் தற்போது வர்த்தகம், போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, தொழில்நுட்பம் என அது பல துறைகளில் விரிவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உலக நாடுகள்
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. பிராந்திய பாதுகாப்பு, ராணுவம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு பிரிவு செயலாளர் ருத்ரேந்திர டாண்டன் கூறுகையில், "வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவு என்பது இரு தரப்பும் கூடுதல் திறனுடன் செயல்பட உதவும்.
இந்தியா விருப்பம்
மேலும், ஆசியான்-இந்தியா சரக்குகள் வர்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வு பணிகளை விரைவில் நிறைவு செய்ய இந்தியா விரும்புகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிலிப்பைன்ஸில் வசிக்கும் இந்தியர்களை சந்திக்கவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்" என்றார்.
மணிலா மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி ஆகியோருடன் மோடி பங்கேற்கும் குவாட் உச்சி மாநாடு நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், மணிலாவில் குவாட் மாநாடு நடத்துவது தொடர்பாக அரசிடம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என்பதால் இது குறித்து நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
