Independence Day 2025: 103 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி! சுதந்திர இந்திய வரலாற்றில் இதுதான் மிக நீண்ட உரை
டெல்லி: இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த உரை (Narendra Modi speech) சுமார் 105 நிமிடங்கள் நீடித்தன. சுதந்திர இந்திய வரலாற்றில் மோடியின் இந்தச் சுதந்திர தின உரை மிக நீண்டதாக இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். டெல்லியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிய போது, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டன.

பிரதமர் மோடி உரை
அதைத் தொடர்ந்து நரேந்திர மோடி செங்கோட்டையில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதில் பிரதமர் மோடி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் வீரர்களுக்கு வீர வணக்கம் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனின் சமரசம் செய்ய முடியாது என்பதையும் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இது மட்டுமின்றி தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்றும் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
மிக நீண்ட உரை
இப்படி தொடர்ச்சியாகப் பிரதமர் மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை 103 நிமிடங்கள் நீடித்தது.. இது பிரதமர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைகளில் இதுதான் மிக நீண்டதாகும். இன்று காலை 7.33 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய மோடி, 9.16க்கு நிறைவு செய்தார். இதற்கு முன்பு அவர் கடந்த 2024ல் 98 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில், அதை அவரே இப்போது முறியடித்துள்ளார்.
பிரதமர் மோடி தொடர்ந்து 12 முறை செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிக முறை சுதந்திர தின உரையாற்றிய பிரதமர்கள் லிஸ்டில் பிரதமர் மோடி 2வது இடத்தில் இருக்கிறார். ஜவஹர்லால் நேரு 17 முறை தொடர்ந்து உரையாற்றிய நிலையில், மோடி 12 முறை உரையாற்றியிருக்கிறார். இந்திரா காந்தி மொத்தம் 16 முறை சுதந்திர தின உரையை ஆற்றியிருந்தாலும் அவர், 1966 முதல் 1977 வரை தொடர்ச்சியாக 11 முறை உரையாற்றினார். பிறகு 3 ஆண்டுகள் அவர் ஆட்சியில் இல்லாததால் 1980க்கு பிறகு 5 முறை சுதந்திர தின உரையாற்றி இருந்தார்.
பிரதமர் மோடியின் உரைகள்
2023ல் மோடி தனது பத்தாவது சுதந்திர தின உரையைச் சுமார் 90 நிமிடங்கள் ஆற்றியிருந்தார். 2016ல் செங்கோட்டையில் அவர் ஆற்றிய உரை 96 நிமிடங்களாகவும், 2019ல் 92 நிமிடங்களாகவும் இருந்தன.
- 2014 - 65 நிமிடங்கள்
- 2015- 88 நிமிடங்கள்
- 2016- 96 நிமிடங்கள்
- 2017- 56 நிமிடங்கள்
- 2018- 83 நிமிடங்கள்
- 2019- 92 நிமிடங்கள்
- 2020- 90 நிமிடங்கள்
- 2021- 88 நிமிடங்கள்
- 2022- 74 நிமிடங்கள்
- 2023- 90 நிமிடங்கள்
- 2024- 98 நிமிடங்கள்
- 2025- 105 நிமிடங்கள்
முந்தைய பிரதமர்கள்
பொதுவாக, பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைகள், முந்தைய பிரதமர்களின் உரைகளை விட நீண்டதாகவே இருந்துள்ளன. பிரதமர் மோடிக்கு முன், 1947-ல் ஜவஹர்லால் நேருவும், 1997-ல் ஐ.கே. குஜ்ராலும் முறையே 72 மற்றும் 71 நிமிடங்கள் உரையாற்றினர். 2015-ல் 85 நிமிடங்கள் உரையாற்றி போது, பிரதமர் மோடி இந்தச் சாதனையை முறியடித்தார்.
குறுகிய சுதந்திர தின உரைகளுக்கான சாதனையை நேருவும், இந்திரா காந்தியும் வைத்துள்ளனர். முறையே 1954 மற்றும் 1966-ல் அவர்கள் தலா 14 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினர். மன்மோகன் சிங்கின் உரைகள் 2012ல் 32 நிமிடங்களாகவும், 2013ல் 35 நிமிடங்களாகவும் இருந்தன. அடல் பிஹாரி வாஜ்பாயின் உரைகள் 2002ல் 25 நிமிடங்களாகவும், 2003-ல் 30 நிமிடங்களாகவும் மிகக் குறுகியதாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
கருப்பு தங்கம் ஜாக்பாட்! புதினின் சீக்ரெட் ஆஃபர்.. உங்க கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!












Click it and Unblock the Notifications