இந்தியா மீது மறைமுக போர்.. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தோலுரித்த மோடி.. உலக நாடுகளுக்கு பறந்த மெசேஜ்
டெல்லி: ‛‛இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மறைமுக போரை தொடங்கி நடத்தி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை கொண்டு வர நான் முயன்றேன். அமைதியை வளர்ப்பதற்காக நான் என்ன ஒவ்வொரு முயற்சியும் விரோதத்தை தான் தந்தது. பாகிஸ்தான் என்பது பயங்கரவாதத்தின் வேராக உள்ளது. பயங்கரவாதத்தால் இந்தியா மட்டுமின்றி உலகின் எந்த பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட அதன் பாதை நேராக பாகிஸ்தானை நோக்கி செல்கிறது என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அதிகமாக பத்திரிகையாளர் சந்திப்பு, இண்டர்வியூக்களில் பங்கேற்பது இல்லை. அவ்வப்போது மட்டும் முக்கிய பிரபலங்களுடன் இண்டர்வியூ கொடுப்பார். அந்த வகையில் அமெரிக்கா பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் இண்டர்வியூவை பிரதமர் மோடி கொடுத்தார்.

பிரதமர் மோடியின் இந்த இண்டர்வியூ இன்று வெளியானது. அதில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது எல்லை தாண்டி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக அவர் சாடினார். அதோடு பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக மறைமுக போரை நடத்தி வருவதாகவும், பாகிஸ்தானுடன் இணக்கமாக விடுக்கப்பட்ட அழைப்பை அந்த நாடு புறக்கணித்ததாகவும் கூறினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார், மேலும் அமைதியை வளர்க்க புது தில்லியின் முயற்சிகள் விரோதத்தையும் துரோகத்தையும் சந்தித்ததாகக் கூறினார். ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஒரு மறைமுகப் போரை நடத்தி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
‛‛அவர்கள் (பாகிஸ்தான்) இணக்கமான சகவாழ்க்கையை விரும்பவில்லை. மீண்டும் மீண்டும் இந்தியாவுடன் முரண்பட வேண்டும் என்பதை முடிவாக வைத்துள்ளனர். அவர்கள் எங்களுக்கு எதிராக மறைமுக போரை நடத்தி வருகின்றனர். இதை சித்தாந்த ரீதியிலானது என்று தவறாக நினைக்க வேண்டாம். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை கொண்டு வர நான் முயன்றேன்.
கடந்த 2014ல் நான் முதல் முதலாக பிரதமராக பதவியேற்றேன். அப்போது எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமருக்கு (அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப்) அழைப்பு விடுத்தேன். இது நல்லெண்ணம் அடிப்படையிலானது. அதோடு பல ஆண்டுகளாக தூதரகங்கள் இடையே இல்லாத ராஜதந்திரத்துக்கான சைகை. எனது வெளியுறவு கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய மக்களே நான் அனைத்து சார்க் நாட்டு தலைவர்களையும் அழைத்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இப்படி அமைதியை வளர்ப்பதற்காக நான் என்ன ஒவ்வொரு முயற்சியும் விரோதத்தை தான் தந்தது. அதோடு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு வாழ்வதில் இந்தியா சோர்வடைந்து இருக்க வேண்டும் என்று அவர்கள் (பாகிஸ்தான்) கூறினார்கள். அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். எண்ணில் அடங்காத உயிர்கள் அழிக்கப்படுகின்றன. இடைவிடாத பயங்கரவாதத்தால் சோர்வடைந்து இருக்கலாம் என்று கூறினர். நீங்களே பாருங்கள் பயங்கரவாதத்தில் எப்படியான சித்தாந்தம் செழித்து வளர்கிறது?"
பாகிஸ்தான் என்பது பயங்கரவாதத்தின் வேராக உள்ளது. உதாரணமாக 9/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்க படை கொன்றது. அவர் எங்கிருந்து பாகிஸ்தானுக்கு வந்தார்? எப்படி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார். இதன்மூலம் பயங்கரவாதமும், பயங்கரவாத மனநிலையும் பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் என்பது இந்தியாவிற்கு மட்டுமில்லை மொத்த உலகிற்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் மையமாக உள்ளது. பயங்கரவாதத்தால் உலகின் எந்த பகுதி பாதிக்கப்பட்டாலும் கூட அதன் பாதை நேராக பாகிஸ்தானை நோக்கி செல்கிறது. பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை வளர்ப்பதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். விரைவில் அமைதியின் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று மனதாரா நம்புகிறோம்'' என்றார்.
அதன்பிறகு 2015ம் ஆண்டில் நவாஸ் ஷெரீப்பை எனது 66வது பிறந்தநாளில் பாகிஸ்தானின் லாகூரில் சந்தித்தேன். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு தெளிவாகவும் நம்பிக்கையுடனும் மாறியுள்ளது என்பது சான்றாக இந்த செய்தி உள்ளது. இது அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாடு குறித்து உலகிற்கு தெளிவான செய்தியை அனுப்பியது. இந்த சந்திப்பின் இந்தியா விரும்பிய பலனை பெறவில்லை'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதம் தொடர்பாக பிற நாடுகளுக்கு பிரதமர் மோடி வார்னிங் மெசேஜை அனுப்பி உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications