சும்மா ஸ்டைலா.. சும்மா கெத்தா.. போஸ் கொடுத்த மோடி.. மீமாகும் கமென்டை வரவேற்று என்ஜாய் என ட்வீட்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்த போட்டோ மீமாகி வருவதாக ஒருவர் போட்ட கமென்ட்டை வரவேற்று என்ஜாய் என ட்வீட் போட்டுள்ளார் மோடி.
பொதுவாக அமைச்சர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரின் ட்வீட்டுகளை கிண்டல் செய்து பதில் அனுப்புவது வழக்கம். தற்போது மோடியின் ட்வீட்டை கிண்டல் செய்து ஒருவர் ட்வீட் அனுப்பியுள்ளார். அதற்கு மோடியும் பதில் அனுப்பியுள்ளார்.

மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ஒருவர் இந்த புகைப்படம் மீமாகி வருவதாக பதில் ட்வீட் போட்டுள்ளார்.
Most welcome....enjoy :) https://t.co/uSFlDp0Ogm
— Narendra Modi (@narendramodi) December 26, 2019
இதை வரவேற்று மோடியும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அவர் போட்ட ட்வீட்டில் வரவேற்கிறேன். என்ஜாய் என அனுப்பியுள்ளார். இவர் சூரிய கிரகணத்தை பார்க்கிறாரா என தெரியவில்லை.
மற்றொரு ட்வீட்டில் மோடி கூறுகையில் இன்று சூரிய கிரகணத்தை என்னால் காண முடியவில்லை. டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் காணமுடியவில்லை. எனினும் கோழிக்கோடு, மற்ற பகுதிகளில் நடந்த கிரகணத்தை நான் லைவாக கண்டேன். இதுகுறித்து நிபுணர்களிடம் கருத்தை பெற்றுக் கொண்டு எனது அறிவை மேம்படுத்திக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
எனவே இந்த ட்வீட்டை பார்க்கும் போது ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் கிரகணத்தை காண்பதற்காக இருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications