பாகிஸ்தானிலிருந்து வந்தது ராக்கி கயிறு.. 20வது வருடமாக அனுப்பி வைத்த மோடியின் ரக்ஷா பந்தன் சகோதரி
டெல்லி: ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானை சேர்ந்த குமர் மோஷின் ஷேக் என்ன பெண்மணி ராக்கி கயிறு மற்றும் வாழ்த்து அட்டை அனுப்பி வைத்துள்ளார். கடந்த 20 வருடங்களாக நரேந்திர மோடிக்கு அவர் தொடர்ச்சியாக ராக்கி அனுப்பி வரும் நிலையில், இந்த வருடமும் அதை மறக்காமல் செய்துள்ளார்.
இந்த ஆண்டு ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி அனுப்பியுள்ள அந்தப் பெண் செய்தியாளர்களிடம் கூறுகையி,ல் நரேந்திர மோடிக்கு ரக்ஷாபந்தன் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . அவரது ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக தினந்தோறும் நான் வேண்டிக்கொள்கிறேன்.

சமீபத்தில் அவர் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுடன் கலந்துகொண்ட நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது . விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஒருவரின் தாய் என்ற முறையில் என்னையும் எனது குடும்பத்தாரையும் டெல்லிக்கு அழைத்து ராக்கியை அவரது கைகளில் கட்டுவதற்கு அனுமதிப்பார் என்று நம்புகிறேன்.
எனது மகன் சுஃபைன் ஷேக், உலகத்திலேயே மிக சிறிய வயதில் பெரும் நீச்சல் வீரராக வந்து பல விருதுகளை வென்றவர் ஆகும். நாட்டுக்காக உழைப்பவர்களை எப்போதுமே ஊக்கப்படுத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் தன்மையாக உள்ளது. இந்தியாவிற்காக அவர் பாராட்டத்தக்க பணிகளை செய்து வருகிறார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அவர் மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். யாரெல்லாம் தடுப்பூசி போட பயந்தார்களோ அவர்கள் இப்போது பயமில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 7ம் தேதி இவர் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவகராக நரேந்திரமோடி இருந்தது முதல் அவரோடு ரக்ஷா பந்தனுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக அந்த பெண் அப்போது தெரிவித்தார்.
இதன்மூலம் 20 வருடங்களுக்கு மேலாக குமர் மோஷின் ஷேக் தொடர்ந்து ராக்கி கயிறுகளை அனுப்பி வருகிறார். ரக்ஷா பந்தன் என்பது சகோதரி தனது சகோதரனுக்கு வாழ்த்தும் தினமாகும். சகோதரன் மூலமாக சகோதரிக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யும் தினமாகும்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications