இந்தியாவின் முதல் தனியார் விமான உற்பத்தி ஆலை- குஜராத் வதோதராவில் தொடங்கி வைத்த மோடி- சாதித்த டாடா!
டெல்லி: குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் கூட்டாகத் திறந்து வைத்தனர். மேலும்
வதோதராவில் உள்ள சி-295 விமானத் தயாரிப்பு வளாகம் உலகளாவிய விமான உற்பத்தியில் நம்பகமான பங்குதாரர் என்ற இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகிறது என்றார் பிரதமர் மோடி.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) வளாகத்தில் சி-295 விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா விமான வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை இரு பிரதமர்களும் பார்வையிட்டனர்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு இன்று புதிய திசையை எட்டியுள்ளது என்றும் கூறினார். சி-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா விமான வளாகத்தை திறந்து வைத்ததைக் குறிப்பிட்ட பிரதமர், இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், 'இந்தியாவில் தயாரிப்போம், உலகத்திற்காக உற்பத்தி செய்வோம்' என்ற இயக்கத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஏர்பஸ் மற்றும் டாடா குழுவினருக்கு மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். காலஞ்சென்ற ரத்தன் டாடாவுக்கும் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
சி-295 விமானங்களின் தொழிற்சாலை புதிய இந்தியாவின் புதிய பணிக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்துவதில் இந்தியாவின் வேகத்தை இங்கே காண முடிகிறது என்றார். 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், தற்போது இந்தத் தொழிற்சாலை C-295 விமானங்களை உற்பத்தி செய்யத் தயாராக உள்ளது என்றார். திட்டங்களை திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் கணக்கிட முடியாத தாமதங்களை நீக்குவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வதோதராவில் பாம்பார்டியர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியதை நினைவு கூர்ந்தார். இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் பெட்டிகள் இன்று மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சி-295 திட்டத்தின் கீழ், மொத்தம் 56 விமானங்கள் வழங்கப்பட உள்ளன, அவற்றில் 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து ஏர்பஸ் மூலம் நேரடியாக வழங்கப்படுகின்றன, மீதமுள்ள 40 இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இந்த 40 விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் பொறுப்பில் உள்ளது. இந்த வசதி இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் துறை இறுதி அசெம்பிளி லைன் ஆகும். இது உற்பத்தி முதல் அசெம்பிளி வரை, சோதனை மற்றும் தகுதி வரை, விமானத்தின் முழு வாழ்க்கைச் சுழற்சியின் விநியோகம் மற்றும் பராமரிப்பு வரை ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பின் முழு வளர்ச்சியை உள்ளடக்கியிருக்கும்.
டாடா தவிர, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் போன்ற முன்னணி பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்களிக்கும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications