தஜிகிஸ்தானை அதிர வைத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- உதவிகள் வழங்குவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தஜிகிஸ்தானுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லி: துருக்கி, சிரியாவை தொடர்ந்து தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தஜிகிஸ்தானுக்கு உதவி வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
துருக்கி, சிரியா நாடுகளில் கடந்த 6-ந் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கி,சிரியாவில் சர்வதேச நாடுகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. நமது நாட்டு ராணுவமும் உடனடியாக துருக்கி நாட்டுக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டன. இடிபாடுகளில் சிக்கி கிடந்த பச்சிளம் குழந்தைகள் உள்ளிட்டோரை நமது ராணுவத்தினர் மீட்டனர்.
ஆபரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் துருக்கி, சிரியாவில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கடந்த வாரம், துருக்கி, சிரியாவில் ஆபரேஷன் தோஸ்த் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது, வீரர்களின் செயல்பாடுகளைப் பாராட்டிய பிரதமர் மோடி, ஒட்டுமொத்த உலகமும் நமக்கு ஒரே குடும்பம் என்ற உணர்வை இந்திய வீரர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் பிரதிபலித்ததாக தெரிவித்தார். மேலும் 2001-ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அங்கு தன்னார்வலராக பணியாற்றிய காலத்தைக் குறிப்பிட்டு, இடிபாடுகளை அகற்றி அதற்கு கீழே உள்ளவர்களைக் கண்டறியும் பணியின் சிரமத்தையும், புஜ்ஜில் மருத்துவமனை இடிந்து விழுந்ததால் ஒட்டுமொத்த மருத்துவ அமைப்பு பாதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் பேரிடர் நேரத்தில் நிவாரணம் மற்றும் மீட்புக்கான இந்தியாவின் திறனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, உலகின் சிறந்த நிவாரணம் மற்றும் மீட்புக் குழு என்ற அடையாளத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். நாம் எவ்வளவு தயாராக உள்ளோமோ அவ்வளவு சிறப்பாக உலகிற்கு சேவை செய்ய முடியும் என்றும் எடுத்துரைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தஜிகிஸ்தானில் ரிக்டரில் 7.3 அலகுகள் பதிவானதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் ரிக்டரில் 6.8 அலகுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வானுயர்ந்த பல கடிட்டங்கள் குலுங்கின; பல கட்டிடங்கள் அப்படியே தரைமட்டமாகின. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதேபோல் ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா எல்லையிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நமது நாட்டின் சில மாநிலங்களிலும் இத்தகைய நில அதிர்வுகள் உணரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் நேற்று தஜிகிஸ்தான் நிலநடுக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தஜிகிஸ்தானுக்கு தேவையான உதவிகள் வழங்குவதாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் தஜிகிஸ்தான் நாட்டு தலைவர்கள், அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எத்தகைய உதவிகள் தேவை என்பது ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications