இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி
டெல்லி: நாட்டு மக்களிடையே இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.
Recommended Video
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நாட்டின் முதன்மையான விஷயங்களை பிரதமர் மோடியே நாட்டு மக்களுக்கு அறிவித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதல் லாக்டவுன் அமல், நீட்டிப்பு, கட்டுப்பாடுகள், தளர்வுகள் தொடர்பாகவும் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி குறித்தும் பிரதமர் மோடி தமது உரையில் சுட்டிக் காட்டினார். கடந்த மாதம் 30-ந் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். அவரது உரைகளிலேயே மிகச் சிறிய உரையாக அது இருந்தது. மொத்தம் 16 நிமிடங்கள் மட்டுமே மோடி பேசியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது; விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; சீனாவுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. அத்துடன் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
இவை குறித்து பிரதமர் மோடி இன்று தமது உரையில் குறிப்பிடலாம். ஏற்கனவே மன்கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் மாதந்தோறும் பிரதமர் மோடி உரையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications