அத்வானி வீட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி.. கேக் கட் செய்து உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அத்வானிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, பின்னர் கேக் கட்டிங் நிகழ்வில் பங்கேற்றார்.
பிரதமர் அத்வானி வீட்டுக்குச் சென்றபோது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அனைவருமே உடனிருக்க அத்வானி கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

மோடி வாழ்த்து
பிரதமர் மோடி, முன்னதாக, அத்வானிக்கு ட்வீட் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மதிப்புள்ள அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக தேசம் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.
அவர் தனது அறிவார்ந்த நோக்கங்கள் மற்றும் புத்திசாலித்தனத்திற்காக பரவலாக மதிக்கப்படுகிறார்." என்று தெரிவித்திருந்தார்.

ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்வானி, தனக்கு ஒரு உத்வேகம் மற்றும் வழிகாட்டி என்று கூறியுள்ளார். புலமை, தொலைநோக்கு மற்றும் புத்திசாலித்தனம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராக அத்வானி கருதப்படுகிறார் என்று அவர் கூறினார்.

ஜேபி நட்டா
மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக கட்சியை மக்களிடம் கொண்டு சென்று நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பாராட்டினார். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்து தெரிவித்த நட்டா, கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கு அத்வானி உத்வேகமாக இருந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் அத்வானி பிறந்தநாளையொட்டி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எல்கே அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன். அவரது ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்தனைகள்." என்று தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர் அத்வானி
1927ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி கராச்சியில், அதாவது சுந்திரத்திற்கு முந்தைய பாகிஸ்தான் பகுதியில், பிறந்த எல்.கே. அத்வானி, 2002 முதல் 2004 வரை நாட்டின் துணைப் பிரதமராக இருந்தார். அத்வானி பாஜகவின் இணை நிறுவனர் மற்றும் மூத்த தலைவர் ஆவார். 1998 முதல் 2004 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 10வது மக்களவையிலும், 14வது மக்களவையிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2009 பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகவும் இருந்தார். 2015 ஆம் ஆண்டில், அவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது. 1986 முதல் 1991 வரை 1993 முதல் 1998 வரையிலும், மீண்டும் 2004-2005 வரையிலும் பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications