43% அதிகரித்த முஸ்லிம்கள்..இந்திய மக்கள் தொகையில் 8% குறைந்த இந்துக்கள்.. EAC - PM ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியாவில் 1950 முதல் 2015 காலக்கட்டத்தில் இந்துக்களின் மக்கள் தொகை என்பது 8 சதவீதம் வரை குறைந்துள்ளது எனவும், முஸ்லிம்களின் மக்கள்தொகை 43 சதவீதம் வரையும், கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை என்பது 5.38 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மக்கள்தொகை அடிப்படையில் சீனா முதலிடத்தில் உள்ளது. நம் நாடு 2வது இடத்தில் உள்ளது. நம் நாட்டின் மக்கள்தொகை என்பது தற்போது 140 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மக்கள்தொகையில் சீனாவை விட இந்தியா முந்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் இந்தியா தான் மக்கள்தொகையில் முதலிடம் பிடித்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகவில்லை. இந்நிலையில் தான் பிரதமருக்கான பொருளாதார ஆலோசசனை குழு (Economic Advisory Council to the Prime minister அல்லது EAC-PM) சார்பில் மக்கள்தொகை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 167 நாடுகள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக நம் நாட்டில் 1950 முதல் 2015ம் ஆண்டுக்கு இடையே மக்கள்தொகை நிலவரம் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 1950ம் ஆண்டை ஒப்பிடும்போது 2015ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை என்பது சரிந்துள்ளது எனவும், அதேவேளையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை என்பது அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
அதன்படி கடந்த 1950-2015 வரையிலான காலக்கட்டத்தில் நம் நாட்டில் இந்து மக்கள்தொகை என்பது 7.8 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதாவது கடந்த 1950ல் இந்திய மக்கள் தொகையில் 84 சதவீதம் பேர் இந்துக்களாக இருந்த நிலையில் 2015ல் இந்துக்களின் எண்ணிக்கை 78 சதவீதமாக சரிந்துள்ளது.
அதேவேளையில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது. ஆனாலும் ஜெயின் மற்றும் பார்சிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. இதில் முஸ்லிம் மக்கள்தொகை என்பது 1950-2015 இடைப்பட்ட காலத்தில் 43.15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி 1950ல் இந்திய மக்கள்தொகையில் 9.48 சதவீதம் பேர் முஸ்லிம்களாக இருந்தனர். ஆனால் 2015ல் மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 14.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 43.15 சதவீத வளர்ச்சியாகும்.
அதேபோல் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 5.38 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சீக்கியர்களின் எண்ணிக்கை 6.58 சதவீதமும், பவுத்தர்களின் எண்ணிக்கை சிறிதளவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நம் அண்டை நாடான பாகிஸ்தான், வங்கசேத்தில் பெரும்பான்மையான மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். ஆனால் இந்த காலக்கட்டத்தில் அங்கு முஸ்லிம்களின் மக்கள்தொகை என்பது அதிகரித்துள்ளது.
னால் இந்தியாவை பொறுத்தமட்டில் பெரும்பான்மை சமூகமாக உள்ள இந்துக்களின் மக்கள்தொகை 8 சதவீதம் வரை சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி நேபாளம் நாட்டில் பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளன. அங்கும் இந்துக்களின் மக்கள்தொகை என்பது 3.6 சதவீதம் வரை சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications