ஓரினசேர்க்கையாளர் மீது வழக்கு போடுவதற்கு கட்டுப்பாடு! போலீசுக்கு செக் வைத்த தலைமை நீதிபதி சந்திரசூட்
டெல்லி: ஒரு நபரின் பாலினம் அவர்களின் பாலின தேர்வுடன் தொடர்புடையது அல்ல. அதாவது திருநங்கை என்பது அவர்களின் பாலினம். அவர்கள் ஆண்களை திருமணம் செய்வது பாலின தேர்வு. தன்பாலின தம்பதியினரின் உறவு தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும், என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை மே 11ஆம் தேதி விசாரணை முடிந்த பின் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்து இன்று தீர்ப்பு வழங்கியது.

இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில், இந்த வழக்கில் 4 தீர்ப்புகள் உள்ளன. நான், நீதிபதி கவுல், நீதிபதி பட் மற்றும் நீதிபதி நரசிம்ஹா ஆகியோரின் தீர்ப்பு தனி தனியாக வழங்கப்பட உள்ளது, என்றார். இது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில், ஒரு நபரின் பாலினம் அவர்களின் பாலின தேர்வுடன் தொடர்புடையது அல்ல. அதாவது திருநங்கை என்பது அவர்களின் பாலினம். அவர்கள் ஆண்களை திருமணம் செய்வது பாலின தேர்வு.
ஒரு திருநங்கை .. ஆணை திருமணம் செய்து கொள்ள முடியும். அத்தகைய திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு திருநங்கை இது போல திருமணம் செய்து கொள்ள சட்டம் உள்ள போது.. திருநங்கை - திருநங்கை இடையே திருமணம்., பெண் - பெண் இடையே திருமணம் திருமணம் செய்தால் அதை சிறப்பு திருமண சட்டத்தில் திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டுச் செல்லும். தன்பாலின நபர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது, மாற்றுப்பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள் நன்மைகள் மற்றும் சேவைகள் மற்றும் 'QUEER' ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும். மற்றவர்களுக்கு வழங்கும் உரிமைகளை இவர்களுக்கு வழங்காமல் இருப்பது ஒரு விதமான அவர்களுக்கான அடிமை உரிமை மீறல்தான்.

தன்பாலின தம்பதியினரின் உறவு தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்கு முன்பு போலீசார் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும்.ஒருவருடைய பாலின அடையாளத்தை பற்றி விசாரிப்பதற்காக மட்டும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து இந்த குறிப்பிட்ட சமூக மக்களை துன்புறுத்தக் கூடாது. காவல்துறையினர் எக்காரணத்தை கொண்டும் இத்தகைய தன்பாலின நபர்களை அவர்களது பிறந்த குடும்பத்திற்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தக் கூடாது, என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், மாநில அரசுகளும் தன்பாலின தம்பதியினர் அவர்களின் பாலியல் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆண் - பெண் தம்பதிகள் மட்டுமே நல்ல பெற்றோராக இருக்க முடியும் என்று சட்டம் கருத முடியாது. இது பாகுபாடு காட்டுவதாக அமையும். எனவே தற்போது உள்ள தத்தெடுப்பு விதிமுறைகள் பல பாலின தம்பதிகளுக்கு எதிரான பாகுபாட்டிற்கான காரணமாக அமைந்துவிடும். பல பாலின தம்பதிகளுக்கு தத்தெடுப்பு வழிகளை மறுப்பது என்பது அடிப்படை உரிமை மறுப்பை சேர்ந்தது ஆகும், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications