Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்ல செய்தி.. அசத்தலான செயலி.. பாஸ்போர்ட் போலீஸ் வெரிபிகேஷனுக்கு இனி 5 நாள் பொதும்! அது எப்படி?

5 நாட்களுக்குள் பாஸ்போர்டுக்கான போலீஸ் சரிபார்ப்பு பணிகள் முடியும் வகையில் மத்திய அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் போலீஸ் சரிபார்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலையில், 5 நாட்களுக்கு போலீஸ் சரிபார்ப்பு பணிகள் முடிந்த பாஸ்போர்டை பெறும் வகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்து இருக்கிறது. இது பொதுமக்களுக்கு மேலும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தேவைப்படும் மிக முக்கிய ஆவணம் பாஸ்போர்ட். ஆனால், அதை விண்ணப்பித்து கையில் வாங்குவதற்குள் மக்கள் பல அலைச்சல்களையும், மன உளைச்சல்களையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

தற்போது டிஜிட்டல் முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு அனுப்பி பணிகளில் எளிதில் முடிந்துவிடும் என்று கூறினாலும், போலீஸ் வெரிபிகேஷனை முடிப்பது பலருக்கு சிக்கலாக மாறிவிடுகிறது.

லட்சம் கொடுக்கும் நிலை

லட்சம் கொடுக்கும் நிலை

குறிப்பாக பல காவல் நிலையங்களில் ரூ.300 முதல் ரூ.500 வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பாஸ்போர்ட் கையில் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இதற்கு 15 முதல் 20 நாட்கள் வரை பொதுமக்கள் காத்திருக்கும் சூழலும் இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 5 நாட்களில் போலீஸ் வெரிபிகேஷன் பணிகளை முடிக்கும் வகையில் 'M Passport Police App' என்ற புதிய செயலியை அறிமுகம் செய்து உள்ளது.

 350 டேப்லட்டுகள்

350 டேப்லட்டுகள்

இதற்காக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு 350 டேப்லட்டுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அதன் மூலம் காகிதம் இல்லாமல் சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என வெளியுறவுத்துறை தெரிவித்து இருக்கிறது. டிஜிட்டல் சரிபார்ப்பு பணியால் நேர விரயம் குறைவதுடன், வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அமித்ஷா பேச்சு

அமித்ஷா பேச்சு

கடந்த வியாழன் அன்று நடைபெற்ற 76 வது போலீஸ் ரைசிங் தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்மார்ட் காவல்துறைக்காக பிரதமர் மோடி அறிமுகம் செய்த காவல்துறை தொழில்நுட்ப திட்டத்தின் கீது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றார். இந்த புதிய முறை டிஜிட்டல் இந்தியாவை பிரதிபலிப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

பிசிசி சான்றிதழ்

பிசிசி சான்றிதழ்

பாஸ்போர்ட் விநியோகத்தில் போலீஸ் சரிபார்ப்பு என்பது முக்கிய அம்சமாக உள்ளது. அதேபோல் சில நாடுகளுக்கு செல்ல தேவைப்படும் பிசிசி எனப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும் பெற மக்கள் காவல்துறையை நாட வேண்டி இருக்கிறது. இதில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், போலீஸ் சரிபார்ப்பு பணிகளில் அனைத்து சேமித்து வைக்கப்படுவது கிடையாது.

தமிழ்நாட்டில் எப்போது?

தமிழ்நாட்டில் எப்போது?

போலீஸ் அதிகாரி பாஸ்போர்ட் விண்ணப்பித்தவரின் வீட்டுக்கு நேரில் சென்றோ அல்லது அவரை காவல்நிலையத்துக்கு அழைத்தோ சரிபார்க்க சொல்வது வழக்கமாக நடந்து வருகிறது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த நபர் அளித்த அனைத்து தகவல்களும் சரி என்று உறுதி செய்யப்பட்டால் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காவல் நிலையத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு பாஸ்போர்ட் கையில் கிடைக்கும். விரைவில் இது தமிழ்நாட்டிற்கு வரும் என்று நம்பலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+