ராகுல் காந்தியா? மோடியா? யார் பிரதமராக வேண்டும்.. இந்த 3 மாநில மக்கள் சொல்வதை பாருங்க!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று ஆந்திர பிரதேசத்தில் 51% மக்கள் விரும்புவதாக பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று ஆந்திர பிரதேசத்தில் 51% மக்கள் விரும்புவதாக பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தல் வெகுவேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் காரணமாக நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று இதில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மூன்று மாநிலம்
அனைத்து மாநிலங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்படாமல் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, அசாம் மாநிலங்களில் மட்டும் தற்போது இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா, யார் மக்களின் தேர்வு என்று இதில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம்
அதன்படி ஆந்திர பிரதேச மக்களில் பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் 38% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதமும் அதே 38% பேர் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் புகழ் அங்கு குறையவோ, ஏறவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி
ஆனால் ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகழ் உயர்ந்துள்ளது. ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் 44% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 51% ஆக உயர்ந்து இருக்கிறது. அவருக்கு ஆந்திராவில் மக்கள் செல்வாக்கு கூடி உள்ளது.

தெலுங்கானா நிலை
தெலுங்கானாவில் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று 2018 செப்டம்பர் மாதம் 44% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் 41% பேர்தான் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதே சமயம் ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று தெலுங்கானாவில் 2018 செப்டம்பர் மாதம் 39% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 43% ஆக உயர்ந்து உள்ளது.

அசாம் நிலை என்ன
ஆனால் அசாமில் மோடிதான் எங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்று 2018 செப்டம்பர் மாதம் 51% பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் 54% பேர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று அசாமில் 2018 செப்டம்பர் மாதம் 28% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 32% ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications