Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இண்டெர்நெட் Archive-வில் மிகப்பெரிய சைபர் அட்டாக்.. கோடிக்கணக்கான பயனர்களின் பாஸ்வேர்டுகள் ஹேக்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இண்டெர்நெட் ஆர்கேவ் எனப்படும் டிஜிட்டல் லைப்ரரி இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதனால், அந்த இணையதளம் முடங்கியதோடு, பல கோடிக்கணக்கான பயனர்களின் தரவுகளும் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாம். உடனடியாக பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Internet Archive எனப்படும் இணைய ஆவணக் காப்பகம் என்பது இலவச, திறந்த கணினிவழி மின் நூலகம் போன்று செயல்படுகிறது. வே பேக் மெஷின் என்று இணையத்தில் பரவலாக அறியப்படும் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவில் உள்ளது.

cyber attack cyber attack internet

இந்த இணைய ஆவணக் காப்பகத்தில் பல கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் இண்டெர்நெட் ஆர்கேவ் இணையவழி சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பாலஸ்தீனிய ஆதரவு ஹேக்கர் குழு இந்த சைபர் அட்டாக்கிற்கு பொறுப்பேற்றுள்ளது. 31 மில்லியன் அதாவது 3 கோடிக்கு அதிகமான பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளன.


மின்னஞ்சல், ஸ்க்ரீன் நேம், என்கிரிப்டடு பாஸ்வேர்டுகள் உள்ளிட்ட தரவுகளும் எடுக்கப்பட்டள்ளதாம். இதனால், உடனடியாக பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். சர்வதேச அளவில் டிஜிட்டல் லைப்ரரி பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், தற்போது பயனர்களின் பல லட்சக்கணக்கான தகவல்கள் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டு இருப்பது பயனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நேற்று இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இண்டெர்நெட் ஆர்கேவின் ஜாவா ஸ்கிரிப்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பல லட்டசக்கனக்கான பயனர்களின் தரவுகள் கசிந்து இருக்கின்றன. வெப்சைட் பக்கம் சென்ற்வர்களுக்கு பாப் அப் மெசெஜ் ஒன்று தோன்றியது. அதில், இண்டெர்நெட் ஆர்கே மிகப்பேரிய பேரழிவு மிக்க பாதுகாப்பு விதிமீறலை சந்திக்கும் என நீங்கள் எப்போதாவது நினைத்து இருக்கிறீர்களா? அதுதான் தற்போது நடந்துஇருக்கிறது என்று 31 மில்லியன் பயனர்களின் தரவுகளை பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் நடைபெற்று இருப்பதை இண்டெர்நெட் ஆர்கேவும் உறுதி செய்து இருக்கிறது. அதன் நிறுவனர் ப்ரெவ்ஸ்டர் காலே கூறுகையில், "சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளதால், ஜே எஸ் லைப்ரரி பயன்படுத்துவதை முடக்கி வைத்துள்ளோம். பாதுகாப்பை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்கள் பகிரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+