டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லாத்தையும் இழுத்து மூடியாச்சு.. கொரோனாவால் எங்களுக்கு தொழில் போச்சு.. புலம்பும் பாலியல் பெண்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சம்பந்தமே இல்லாமல் பாலியல் தொழிலுக்கு பெருத்த அடி விழுந்துள்ளதாக அந்த தொழிலில் ஈடுபடும் பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் சிலரின் உடல்நிலையை பொருத்து ஒரு உயிர் கொல்லி நோயாகவே கருதப்படுகிறது. எய்ட்ஸாவது தவறான உறவுகளால் ஏற்பட்டு உயிரிழப்பை கொடுக்கிறது. ஆனால் இந்த கொரோனாவோ வைரஸ் பாதித்தவர் சுவாசித்த காற்றை மற்றவர் சுவாசித்தாலே வந்துவிடுகிறது

பின்னர் சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலத்தையே பாதித்து நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களிடம் கடைசியில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

சென்னை அரும்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி?.. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி சென்னை அரும்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி?.. ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதி

மூடல்

மூடல்

இது பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஷாப்பிங் மால்கள், சுற்றுலா தலங்கள், உலக புராதன சின்னங்கள், பொழுது போக்கு அம்சங்கள், இன்பச் சுற்றுலாக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டது.

வியாபாரிகள்

வியாபாரிகள்

பெரிய பெரிய பிரபல கோயில்களும் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் வெகு தூரத்திலிருந்து வந்து ஏமாறுகின்றனர். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா தலங்களுக்கு அருகே உள்ள கடைகள், கால்டாக்சி சேவைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புராதன சின்னங்களை பார்க்க வரும் வெளிநாட்டினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொருட்களை வாங்க ஆளின்றி கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகள்

குழந்தைகள்

அது மட்டுமல்லாமல் பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு பணியாளர்களுக்கு பணியில்லாத சூழல் நிலவுகிறது. அங்கு கேன்டீன்களை வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் வீட்டு வாடகை, மளிகை சாமான், குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம், ஈஎம்ஐ உள்ளிட்டவற்றை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழிப்பிதுங்கியுள்ளனர்.

அச்சம்

அச்சம்

இவர்களை போலவே பாலியல் தொழிலாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று வியாதி என்பதால் எங்கே உறவு வைத்து கொண்டால் தொற்றிவிடுமோ என்ற அச்சத்தால் ஏராளமான பாலியல் தொழில் செய்யும் இடங்களுக்கு வருவதில்லை என்பதால் அந்த தொழில் நலிந்துவிட்டதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

இதுகுறித்து சில பெண்கள் மிகவும் சந்தோஷப்பட்டு கொள்கின்றனர். என்னதான் இந்த தொழில் பாதிப்பால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உறுதி என்றாலும் சில காமக்கொடூரர்களிடம் இருந்து சிறிது நாட்கள் விடுதலை கிடைக்கும் என்பதால் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே சானிட்டரி நாப்கின்களுக்கான ஜிஎஸ்டியால் இந்த துறையைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனாவால் பாலியல் தொழிலுக்கு பேரிடியாகவே இதை நம்பியுள்ள தொழிலாளிகளால் பார்க்கப்படுகிறது.

English summary
Porn Industry calls for Shutdown due to Coronavirus. Their livelihood affected so much.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X