மோடி 2.O டூ 3.O! கிரண் ரிஜிஜு முதல் சிந்தியா வரை! இலாக்காக்கள் மாற்றப்பட்ட மத்திய அமைச்சர்கள் யார்
டெல்லி: நேற்று என்டிஏ கூட்டணியின் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சராக பதவியேற்றனர். இந்நிலையில் தற்போது அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் வெளியாகியுள்ளன. இதில் மோடி 2.O அமைச்சரவையிலிருந்து மோடி 3.O அமைச்சரவையில் இலாக்காக்கள் எத்தனை பேருக்கு மாற்றப்பட்டிருக்கின்றன என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து நிலையில், நேற்று மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்றார். இந்நிலையில் தற்போது அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல இந்த முறையும் பாஜக முக்கிய துறைகளை தன் வசமே வைத்துக்கொண்டிருக்கிறது.
துறை மாற்றப்பட்ட அமைச்சர்கள்:
- சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் - ஜேபி நட்டா - 2021 முதல் இந்த துறை மன்சுக் மாண்டவியா வசம் இருந்து வந்தது
- இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை - ஜேபி நட்டா - 2021 முதல் இந்த துறை மன்சுக் மாண்டவியாவிடம் வசம் இருந்து வந்தது
- இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை - மன்சுக் மாண்டவியா - 2021 முதல் இந்த துறை அனுராக் சிங் தாக்கூர் வசம் இருந்து வந்தது
- தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை - மன்சுக் மாண்டவியா - 2021 முதல் இந்த துறை பூபேந்தர் யாதவ் வசம் இருந்து வந்தது
- உணவு பதப்படுத்தும் தொழில் துறை - சிராக் பாஸ்வான் - 2021ல் கிரன் ரிஜுஜூவிடம் இருந்தது
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் - சிவராஜ் சிங் சவுகான் - 2021ல் அர்ஜுன் முண்டா வசம் இந்த துறை இருந்தது
- ஊரக வளர்ச்சி துறை - சிவராஜ் சிங் சவுகான் - 2021ல் கிரிராஜ் சிங்கிடம் இத்துறை இருந்தது
- மின்சாரத்துறை - மனோகர் லால் கட்டார் - கடந்த 2019 முதல் இந்த துறை ராஜ்குமார் சிங் வசம் இருந்து வந்தது
- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை - மனோகர் லால் கட்டார் - 2019 முதல் இந்த துறை ஹர்தீப் சிங் பூரி வசம் இருந்து வந்தது
- சுற்றுலாத்துறை - கஜேந்திர சிங் ஷெகாவத் - 2021 முதல் இந்த துறை ஜி.கிஷன் ரெட்டி வசம் இருந்து வந்தது
- கலாச்சாரத்துறை - கஜேந்திர சிங் ஷெகாவத் - 2021 முதல் கிஷன் ரெட்டி வசம் இந்த துறை இருந்து வந்தது
- தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை - அஸ்வினி வைஷ்ணவ் (இணையமைச்சர் எல்.முருகன்) - 2021ல் இந்த துறை அனுராக் சிங் தாகூர் வசம் இருந்தது
- மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை - அஸ்வினி வைஷ்ணவ் - 2021ல் இந்த துறை ஜிதேந்திர சிங் வசம் இருந்தது
- சிவில் விமான போக்குவரத்துத்துறை - கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு - 2021 முதல் இந்த துறை ஜோதிராதித்ய சிந்தியா வசம் இருந்து வந்தது
- மனிதவள மேம்பாட்டுத்துறை - தர்மேந்திர பிரதான் - 2019ல் இந்த துறை ரமேஷ் பொக்ரியால் வசம் இருந்தது
- பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை - அன்னபூர்ணா தேவி - 2019ல் இந்த துறை ஸ்மிருதி இரானி வசம் இருந்தது
- நீர்வளத்துறை - சிஆர் பாட்டீல் - 2019 முதல் இந்த துறை கஜேந்திர சிங் ஷெகாவத் வசம் இருந்து வந்தது.
- நாடாளுமன்ற விவகாரத்துறை - கிரண் ரிஜுஜூ - 2019 முதல் பிரஹலாத் ஜோஷி வசம் இந்த துறை இருந்தது
- சிறுபான்மை விவகாரத்துறை - கிரண் ரிஜிஜு - 2022ல் இந்த துறை ஸ்மிருதி இரானி வசம் இருந்தது
- கனரக தொழில்துறை - ஹெச்.டி.குமாரசாமி - 2021 முதல் இந்த துறை மகேந்திர நாத் பாண்டே வசம் இருந்து வந்தது.
- எஃகு துறை - ஹெச்.டி.குமாரசாமி - 2022ல் இந்த துறை ஜோதிராதித்ய சிந்தியா வசம் இருந்தது
- தொலைத்தொடர்பு துறை - ஜோதிராதித்ய சிந்தியா - 2021 முதல் அஸ்வினி வைஷ்னவிடம் இந்த துறை இருந்து வந்தது
- வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி துறை - ஜோதிராதித்ய சிந்தியா - 2021 முதல் இந்த துறை ஜி.கிஷன் ரெட்டி வசம் இருந்தது
- ஜவுளி துறை - கிரிராஜ் சிங் - 2021ல் இந்த துறை பியூஷ் கோயல் வசம் இருந்தது
- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை - பிரஹலாத் ஜோஷி -2021ல் பியூஷ் கோயலிடம் இந்த துறை இருந்தது
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை - பிரஹலாத் ஜோஷி - 2019 முதல் இந்த துறை ராஜ் குமார் சிங் வசம் இருந்து வந்தது
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை - ஜிதன் ராம் மஞ்சி - 2021ல் நாரயண ராணேவிடம் இருந்தது.
- பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் - லலன் சிங் - 2021 முதல் இந்த துறை கிரிராஜ் சிங் வசம் இருந்து வந்தது
- மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணை துறை - லலன் சிங் - 2021 முதல் இந்த துறை பர்ஷோத்தம் ரூபாலா வசம் இருந்து வந்தது
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை - சர்பானந்தா சோனோவால் - 2019 முதல் இந்த துறை மன்சுக் மாண்டவியா வசம் இருந்து வந்தது
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் - டாக்டர் வீரேந்திர குமார் - 2021ல் வீரேந்திர குமார் காடிக் வசம் இந்த பதவி இருந்தது
- பழங்குடியினர் விவகாரத்துறை - ஜுவல் ஓரம் - 2019ல் இந்த துறை அர்ஜுன் முண்டா வசம் இருந்தது
- நிலக்கரித்துறை, சுரங்க அமைச்சகம் - ஜி கிஷன் ரெட்டி - 2019 முதல் இந்த துறை பிரகலாத் ஜோஷி வசம் இருந்து வந்தது
அதேதுறையில் தொடர்பவர்கள்:
- உள்துறை - அமித் ஷா
- கூட்டுறவுத்துறை - அமித் ஷா
- பாதுகாப்புத்துறை - ராஜ்நாத் சிங்
- வெளியுறவு - எஸ்.ஜெய்சங்கர்
- நிதி - நிர்மலா சீதாராமன்
- கார்ப்பரேட் விவகாரம் - நிர்மலா சீதாராமன்
- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை - நிதின் கட்கரி
- ரயில்வேத்துறை - அஸ்வினி வைஷ்ணவ்
- வர்த்தகம் மற்றும் தொழில்துறை - பியூஷ் கோயல்
- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை - ஹர்தீப் சிங் பூரி
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் - பூபேந்திர யாதவ்
என ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், பல அமைச்சர்களுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. மாற்றி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications