பொதிகை மலையில் ட்ரெக்கிங்.. இனி புதிய மாற்றம்! பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் பொதிகை மலையில், ட்ரெக்கிங் செல்வதற்கு போதுமான ஏற்பாடு இல்லையென சுற்றுலா பயணிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில் ட்ரெக்கிங் செல்லும் பயணிகளுக்கு புதிய அறிவிப்பை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
அதாவது, தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு பாதுகாப்பான ட்ரெக்கிங் பாதையை உருவாக்கவும், மலையேறுபவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வழிகாட்டிகள் பயிற்சியை மேம்படுத்தவும் இந்த நிதி உதவும்.












Click it and Unblock the Notifications