சர்ப்ரைஸ்.. பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஔஷதி.. செங்கோட்டையில் மோடி சொன்ன "மக்கள் மருந்தகம்".. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு பொதுமக்களின் நன்மைக்காக அடுத்த அதிரடியை அறிவித்திருக்கிறார், நாட்டின் பிரதமர் மோடி.. செங்கோட்டையில், சுதந்திர தின உரையில் இந்த அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் நன்மைக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.. இதில் ஒன்றுதான், கடந்த 2015ல் தொடங்கப்பட்ட பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக திட்டமாகும்.

Pradhan Mantri Bhartiya Janaushadhi Kendra and PM Modis major Announcement about PMBJK

சாதாரண மக்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன், நாடு முழுவதும் 739 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதுதான் இந்த மக்கள் மருந்தகம்.

அறுவை சிகிச்சை சாதனம்: இந்த மருந்தகங்களில் 1,600 க்கும் மேற்பட்ட மருந்துகள், ஒரு ரூபாய்க்கு சுவிதா சானிடரி நாப்கின்கள், 250 அறுவை சிகிச்சை சாதனங்கள் என அனைத்துமே மலிவு விலையில் கிடைக்கின்றன. இப்போது, மருந்து கடைகளின் எண்ணிக்கை 8735 ஆக உயர்ந்துள்ளது.. வரும் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 10,000 மருந்துகடைகளாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், மக்கள் மருந்தகங்களில் அதிகபட்சமாக ரூ.100 கோடிக்கு மருந்துகள் விற்பனையாகியிருக்கின்றன. இதன் மூலம் நாட்டின் குடிமக்களுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பணமும் மிச்சமாகியுள்ளது. பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களில் மருந்தகம் தொடங்கினால், ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

மக்கள் மருந்தகம்: நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் இந்த மக்கள் மருந்தகங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.. இதற்காக, முதற்கட்டமாக சுமார் 50 ரயில் நிலையங்களில் மருந்தகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெளிச்சந்தையில் 1000 ரூபாய்க்கு விற்கப்படும் மருந்துகள், இந்த மக்கள் மருந்தகத்தில் ரூ. 400 முதல் 500 க்கு மட்டுமே விற்கப்படுகிறது.. அந்தவகையில், மத்திய அரசின் முடிவு ரயில்வே பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெறும் என்றும் நம்பப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் மோடி நேற்றைய தினம் செங்கோட்டையில், தமது சுதந்திர தின உரையின்போது, மக்கள் மருந்தகம் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மோடி உரை: அதன்படி, மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல, மேலும் மக்கள் மருந்தக மையங்கள் மக்களுக்கு குறிப்பாக நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளது என்றும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மாதந்தோறும் ரூ.3000 பில் வருகிறது.. மக்கள் மருந்தக மையங்கள் மூலம், 100 ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை, 10 முதல், 15 ரூபாய்க்கு அரசு வழங்கி வருகிறது..

அதிரடி அறிவிப்பு: பாரம்பரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு ரூ.13,000 முதல் ரூ .15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா திட்டத்தை அரசாங்கம் அடுத்த மாதத்தில் அறிமுகப்படுத்தும். மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+