பிரகாஷ் ஜவடேகர் பதவி விலகல்.. அழுத்தமா.. என்ன காரணம்.. குழம்பும் டெல்லி!
டெல்லி :பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் ராஜினாமா செய்தது பாஜக தலைவர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. ஏனெனில் பிரகாஷ் ஜவடேகர் தான் அரசின் செய்தி தொடர்பாளராக கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.
இதேபோல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் மிகப்பெரிய ஆளுமையாக பாஜகவில் திகழ்ந்தவர். இவரது ராஜினாமாவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருந்து சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ்குமார் கங்வார், பாபுல் சுப்ரியோ, தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ, ரத்தன்லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, திபஶ்ரீ செளத்ரி ஆகிய 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

செய்தி தொடர்பாளர்கள்
ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகிய இருவருமே பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை சார்பாக கொரோனா பிரச்சனை , பொருளாதார மந்தநிலை மற்றும் வெளிநாட்டு சமூக ஊடகங்களுடனான பகை குறித்து அரசாங்கம் சார்பாக பேசிக்கொண்டிருந்த முக்கியமான தலைவர்கள் ஆவர்.

ட்விட்டர் பிரச்சனை
ரவிசங்கர் பிரசாத் சட்டம் மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சராக இருந்தார், சமீபத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் தொடர்பாக ட்விட்டருடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக சிக்கலில் சிக்கினார். ட்விட்டருடன் சுமூக பேசி புதிய சட்டத்தை சம்மதிக்க வைக்காமல் அதை கையாண்ட விதத்தால் சர்வதேச ஊடகங்கள் மோடி அரசை கடுமையாக விமர்சக்க தொடங்கின. இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பின்னணி தெரியவில்லை
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதவி விலகியதுதான். எந்த சர்ச்சையும் இல்லை. இவர் தான் அரசின் செய்தி தொடர்பாளராக இருந்தார். பல ஆண்டுகளாக ஊடகங்களுக்கு இவர் தரும் செய்தி தான் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவலா இருந்தது. இவரது ராஜினாமாவின் பின்னணி என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

கோவிட் பிரச்சனை
இதுபோல் இன்னொரு ராஜினாமாவும் பெரிதாக பேசப்படுகின்றன. சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன். கோவிட் நெருக்கடியை அரசாங்கம் தவறாக கையாண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இரண்டாவது அலைக்கு முன்பு அதிகாரிகள் எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை என்று ஹர்ஷ்வர்தன் மீது புகார் எழுந்தது. ராகுல் காந்தி முதல் பலரும் பிரதமர் மோடியை சரமாரியாக கேள்விக்குள்ளாக்கினார். மோடி அரசு கொரோனா இரண்டாவது அலை பிரச்சனையால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியதிருந்தது. . அதனால் ஹர்ஸ் வர்தன் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கருதப்டுகிறது.

7 பேருக்கு பதவி உயர்வு
இந்நிலையில் இன்று மாலை நடந்த பதவியேற்பு மூலம் முப்பத்தாறு புதிய அமைச்சர்கள் மோடியின் அரசாங்கத்தில் இணைந்துள்ளார்கள், ஏழு பேர் கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். நிதி, வெளியுறவு, உள்துறை மற்றும் பாதுகாப்பு ஆகிய பெரிய நான்கில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications