2019ம் ஆண்டின் சிறந்த பொய்யர் ராகுல் காந்தி.. பாஜக கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் தலைவராக ஆனதில் இருந்தே ராகுல் காந்தி எப்போதும் பொய் தான் பேசிவருவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டி உள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கும் எதிராக காங்கிரஸ் போராடி வரும் நிலையில் என்.பி.ஆர் (தேசிய மக்கள் தொகை பதிவேடு) ஏழை மக்கள் மீதான வரி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளதுடன் ராகுல் காந்தியை பொய்யர் என்று விமர்சித்துள்ளார்.

மக்கள் பாஜகவுக்கு

மக்கள் பாஜகவுக்கு

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் நாட்டில் உறுதியற்ற தன்மை இருப்பதாக காட்ட முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார், ஆனால் புதிய குடியுரிமைச் சட்டம் மற்றும் என்.பி.ஆர் விஷயத்தில் மக்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றார்.

அரசின் நலத்திட்டங்கள்

அரசின் நலத்திட்டங்கள்

என்பிஆரின் எந்த ஒரு கண்காணிப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கியது அல்ல என்றும் அதன் தரவுகளை வைத்து ஏழைகளை அடையாளம் காண பயன்படுத்தப்படும் என்றும் விளக்கம் அளித்தார். இந்த தரவுகள் மூலம் அரசின் நலத்திட்டங்களை இலக்கு நிர்ணயித்த மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

ராகுல் பொய்யர்

ராகுல் பொய்யர்

2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இதேபோன்ற பதிவேடு மேற்கொள்ளப்பட்டது என்று கூறிய பிரகாஷ் ஜவடேகர், காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே எப்போதும் எதையாவது சொல்லுவார் என்றும் பொய்களையே பேசுவார் என்றும் குற்றம்சாட்டினார்.

காங். ஊழல் கட்சி

காங். ஊழல் கட்சி

2019ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி என்று விமர்சித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பொய், வதந்திகள் பரப்புவது,ஊழல் செய்வதையே பிரதானமாக கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கொண்டுவரும் திட்டங்கள் புரியாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+