உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.. ஆழ்ந்த கோமாவில் பிரணாப் முகர்ஜி!
டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கும் ஆர் ஆர் ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகையில் நேற்று காலை வரை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டார்.

அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் தொடர்ந்து செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். பிரணாப் முகர்ஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லி ஆர் ஆர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த 10-ஆம் தேதி தலையில் ரத்தம் கட்டியிருந்ததை அடுத்து அது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டது. இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுவிட்டது. கடந்த 13 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வரும் அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.
எனினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறுகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications