நன்றி சொல்ல உனக்கு.. வார்த்தையில்ல எனக்கு! பாஜகவை மண்ணைக் கவ்வ வைத்த கரப்பான்! பிகே வென்றது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் மாநிலத்தில் பங்கிப்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் கோட்டையை தகர்த்து பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருக்கிறார். தான் சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே முன்னெடுத்த மாணவர் போராட்டம் தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 30 ஆண்டுகளாக பாஜக கோட்டையாக இருந்த பங்கிப்பூர் தொகுதி பிரசாந்த் கிஷோர் கைவசம் வந்ததற்கு சில முக்கிய காரணங்களை பார்க்கலாம்..

குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா, பீகாரின் பங்கிப்பூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஜூலை 30-ம் தேதி நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பங்கிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ஜன் சூரஜ் கட்சியின் தலைவரும் அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருக்கிறார்.

Prashant Kishor Defeats BJP

பங்கிப்பூர் வங்கிப் தொகுதி பாஜக தேசிய தலைவர் நிததின் நபினின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் சட்ட சபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.

பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில் கடந்த 2025 சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுரஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இந்த தேர்தலில் நேரடியாக களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். பாஜகவின் கோட்டையை பிரசாந்த் கிஷோர் கைப்பற்றியுள்ளது அவரது செல்வாக்கை தேசிய அளவில் உயர்த்தி உள்ளது. இந்த வெற்றி வரும் தேர்தல்களிலும் இந்த வெற்றி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

அதே நேரத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் மாணவர் போராட்டம் இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்கின்றனர். இதற்கு இடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே முன்னெடுத்த போராட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பீகார் இடைத்தேர்தலில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தியது என்பது குறித்து சில அம்சங்களை பார்க்கலாம்

உடைந்த பாஜக கோட்டை

பங்கிப்பூர் தொகுதி கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவின் இரும்புக் கோட்டையாக இருந்தது. கடைசியாக அந்தத் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு முன் அவரது தந்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆனால், நீட் வினாத் தாள் கசிவு விவகாரம், அதைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் நடைபெற்ற சிஜேபி போராட்டம், பாஜக மீதான அதிருப்தியை அதிகரித்தது. இதை அரசியல் ரீதியாக திறம்படக் கையாண்ட பிரசாந்த் கிஷோர், 19000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார்.

மாணவர்கள் கோபம்

பங்கிப்பூர் தொகுதி பாட்னாவின் முக்கிய கல்வி மையமாக திகழ்கிறது. ஏராளமான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் அமைந்துள்ள இந்த தொகுதியில் மாணவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளது. நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு, கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை குறைவு போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து சிஜேபி நடத்திய போராட்டம் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தி நேரடியாக ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான வாக்குகளாக மாறி இருக்கிறது.

போலீஸ் நடவடிக்கை

தேர்தலுக்கு முன்பாக, சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக பீகாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளை எடுத்தனர். மாநிலம் முழுவதும் சுமார் 700 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் புதிய போராட்டம் நடைபெறும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, மாநில அரசு வழக்குகளை வாபஸ் பெற்றாலும், அந்த நடவடிக்கை மாணவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பங்களிடையிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது மாற்று அரசியல் சக்தியாக இருந்த ஜன் சுரஜ்க்கு சாதகமான சூழலை உருவாக்கியது.

உடைந்த சாதி

கடந்த காலங்களில் பங்கிப்பூர் தொகுதியை பொறுத்தவரை பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக பூமிகார், பிராமணர் உள்ளிட்ட மேல் சாதி வாக்காளர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் அந்த வாக்காளர்களின் ஒரு பகுதியினர் இந்த முறை ஜன் சுரஜ் கட்சியை நாடி இருக்கின்றனர். சிஜேபி போராட்டத்தால் உருவான ஆட்சிக்கு எதிரான மனநிலை பல ஆண்டுகளாக பீகாரில் ஆதிக்கம் செலுத்திய சாதி வாக்குகளை பலவீனப்படுத்தியது. இது மட்டுமல்லாமல் பாரம்பரியமாக பாஜகவை ஆதரித்த சில வாக்காளர்களும் பிரசாந்த் கிஷோருக்கு ஆதரவாக திரும்பியதாக தேர்தல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

குறைந்த வாக்குப்பதிவு

இந்த இடைத்தேர்தலில் வெறும் 34.30 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவாகின. முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் இது 41.45 சதவீதமாக இருந்தது. குறைந்த வாக்குப்பதிவு பொதுவாக ஆளும் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், இந்த முறை ஆட்சிக்கு எதிரான மனநிலையுடன் இருந்த இளைஞர்களின் வாக்கை பிரசாந்த் கிஷோர் அப்படியே அள்ளியது. இதனால் பாஜகவின் பாரம்பரிய வாக்கு வாங்கி அரசியல் முழுமையாக செயல்படவில்லை.

சுருங்கிய ஆர்ஜேடி

ஜன் சூரஜ் கட்சிக்கு ஆதரவாக சிஜேபியின் ஆதரவு இந்த தேர்தலில் அதிகமாக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை, வேலை வாய்ப்பு, இளைஞர்களின் எதிர்காலம், கல்வி மற்றும் நிர்வாக பிரச்சனைகள் ஆகியவற்றை ஜன் சுராஜ் கட்சியும் சிஜேபி கட்சியும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பிரச்சாரமாக முன்னெடுத்தனர். பீகாரில் மிகப்பெரிய ஆதரவை கொண்ட எதிர்க்கட்சியான ஆர்ஜேஅடி இந்த விவகாரங்களை கையாளதால் போட்டியிலிருந்து விலகியதாகவே சொல்லப்படுகிறது. இதனால்தான் அக்கட்சி வேட்பாளர் ரேகா குப்தா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். பாஜகவுக்கு மாற்றாக வாக்களிக்க விரும்பிய பலரும் ஆர்ஜேடியை தவிர்த்து நேரடியாக பிரசாந்த் கிஷோருக்கு ஆதரவளித்ததே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்கின்றனர்.

இளைஞர்கள் சக்தி

பங்கிப்பூர் இடைத்தேர்தல் வெற்றி ஒரு தொகுதியின் வெற்றி என்பதை தாண்டி இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே பல அரசியல் ஆய்வாளர்களும் மதிப்பிடுகின்றனர். சாதி அரசியலை விட இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், வேலை வாய்ப்பு, கல்வி, நிர்வாகம் போன்ற பிரச்சனைகள் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் வகையில் இளைஞர்களிடையே ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை இந்த தேர்தல் உறுதிப்படுத்தி உள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+