பிரசாந்த் கிஷோர் வெல்வாரா? பீகார் உள்பட 3 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல்.. விறுவிறு ஓட்டுப்பதிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதில் பீகாரில் உள்ள பங்கிபூர் சட்டசபை தொகுதியில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டுள்ள நிலையில் அவர் வெல்வரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

prashant-kishor-on-race-3-assembly-seats-by-elections-polling-starts-in-bihar-gujarat-and-madhya-p

பீகார் மாநிலம் பாங்கிபூர், குஜராத் மாநிலம் மஞ்சல்பூர் மற்றும் மத்திய பிரதேச மாநிலம் தாடியா உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது.

காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இதில் பீகார் மாநிலம் பாங்கிப்பூர் சட்டசபை தொகுதியில் சட்டசபை தொகுதியில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் போட்டியிட்டுள்ளார். இவர் தனது ஜன்சுராஜ் கட்சி சார்பில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த பாஜகவின நிதின் நபின் கட்சியின் தேசிய தலைவராகி ராஜ்யசபா எம்பினார்.

இதனால் அந்த தொகுதி காலியான நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் களமிறங்கி உள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் 32 வயது நிரம்பிய நீரஜ் குமார் சின்ஹா போட்டியிட்டுள்ளார். அகிலேஷ் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் ரேகா குமாரி குப்தா களமிறங்கி உள்ளார்.

அதேபோல் குஜராத் மாநிலம் மஞ்சல்பூர் சட்டசபை தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக யேகேஷ் பாய் நராராண்டா் படேல் இருந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இங்கு பாஜக சார்பில் சதீஷ் படேல், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் பிக்ஹாபாய் ராப்ரி போட்டியிட்டுள்ளார்.

மேலும் மத்திய பிரதேச மாநிலம் தாடியா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக ராஜேந்திர பார்த்தி இருந்தார். இவர் வங்கியில மோசடி செய்த வழக்கில் தண்டனை பெற்றார். இதனால் தகுதி நீக்கம் ஆனார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் அஷ்ரோஷ் திவாரி போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குன்வார் கான்ஷியாம் சிங் போட்டியிட்டுள்ளார்.

இன்று இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் இந்த 3 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+