"கட்சியா அது.. தலைமை சரிப்பட்டு வராது.. அவங்களுடன் சேர்ந்தால் நமக்கும் தோல்வி தான்!" சீறும் பிகே
டெல்லி: பீகார் மாநிலத்தில் இப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியைச் சாடி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அக்கட்சியில் நிர்வாக ரீதியாக மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் தான், கடந்த மாதம் பிரபல தேர்தல் ஆலோசகர் பிகே காங்கிரஸ் தலைமையைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியை மீட்கும் திட்டத்தை அவர் விளக்கி இருந்தார்.

பிகே
அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று தகவல் பரவியது. பிகே வருகைக்குக் காங்கிரஸில் பெரியளவில் எதிர்ப்பு இல்லை என்பதால் அவர் காங்கிரஸில் இணைவது கிட்டதட்ட உறுதி என்றே கூறப்பட்டது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியில் அவர் இணைவது தடைப்பட்டது. இதையடுத்து அவர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கேற்ப அவர் தனது சொந்த மாநிலமான பீகாரில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.

சுற்றுப்பயணம்
பீகார் கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள குறைகளை நேரடியாக மக்களிடம் இருந்து அவர் கேட்டறிந்து வருகிறது. இதனிடையே இன்று முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைஷைலியில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்குப் பேசிய பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது குறித்தும் தற்போதுள்ள தலைமை குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

ஒரே ஒரு தேர்தல் தோல்வி
அந்த கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், "2015இல் நாம் பீகாரில் வெற்றி பெற்றோம். 2017இல் பஞ்சாப், 2019இல் ஆந்திராவில் நம்முடன் இணைந்தவர்கள் வெற்றி பெற்றார்கள். அதேபோல கடந்த ஆண்டு தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் நாங்கள் வெற்றி பெற்றோம். கடந்த 11 ஆண்டுகளில், ஒரே ஒரு தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்தோம். அது 2017 உத்தரப்பிரதேச தேர்தல். அதனால் காரணமாகவே காங்கிரஸுடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று முடிவு செய்தேன்

இணைய முடியாது
காங்கிரஸ் கட்சி ஒரு போதும் செயல்படாத கட்சி. இப்போது இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் அப்படி தான் உள்ளனர். காங்கிரஸ் கட்சி தோல்வியை நோக்கிச் செல்வது மட்டும் இல்லை. அவர்கள் மற்ற அனைவரையும் கூட சேர்த்துக் கூட்டிக்கொண்டு போவார்கள். அவர்களுடன் இணைந்தால் நானும் மூழ்கிவிடுவேன்" என்றார் கடுமையாகச் சீறினார்.

படுதோல்வி நிச்சயம்
காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கச் சமீபத்தில் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அந்தக் கூட்டம் குறித்தும் பேசிய பிரசாந்த் கிஷோர், "உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டம் முழுக்க முழுக்க தோல்வி தான்.இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியையே சந்திக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
-
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications