பீகாரை புரட்டிப் போட்ட பிகே.. சாதி அரசியலை தாண்டி செல்லும் வாக்காளர்கள்! பங்கிப்பூர் புகட்டிய பாடம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பங்கிப்பூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருந்த அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். கடந்த ஜூலை 30ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது ஜன் சூரஜ் கட்சியின் நிறுவனரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று இருக்கிறார். பாஜகவின் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக இருந்த பங்கிப்பூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று இருப்பது வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல சாதி, மத அரசியலை தாண்டிய மிகப் பெரிய மாற்றம் என்கின்றார் அரசியல் பார்வையாளர்கள் .

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவில் அமைப்பு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த வகையில் இளம் தலைவராக இருந்த நிதின் நபின் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் பீகார் மாநிலம் பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அவர் தேசிய அரசியலுக்கு வரும் பொருட்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Prashant Kishor Wins Bankipur

இதை அடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 1995 ஆம் ஆண்டு முதல் அந்த தொகுதியில் தொடர்ந்து பாஜகவே வெற்றி பெற்று வந்த நிலையில் அது பாஜகவின் இரும்பு கோட்டையாகவே விளங்கியது.

இந்த நிலையில் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜன் சுரத் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோரும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதாவின் நீரஜ் குமார் சின்ஹா போட்டியிட்ட நிலையில் சுமார் 19000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் பீகாரின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் ரேகா குப்தா வெறும் 14,000 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைத்த பிரசாந்த் கிஷோர் முதன் முறையாக நேரடியாக தேர்தலில் களம் இறங்கிய நிலையில் அவர் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய அரசியல் புரட்சியாகவே பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு பீகாரில் பொதுத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூரத் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த இடைத்தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றி சாதாரண வெற்றி அல்ல எனவும். புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம் என்கின்றனர் தேசிய அரசியல் பார்வையாளர்கள். தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எழுச்சி ஆகியவற்றோடு பீகாரின் இடைத்தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டு பார்க்கின்றனர். பீகாரைப் பொறுத்தவரை சாதி மதம் என பல்வேறு காரணிகள் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து வந்த நிலையில், தற்போது இளைஞர்களின் புதிய சிந்தனையே பிரசாந்த் கிஷோரின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்கின்றனர்.

இந்தியாவை பொருத்தவரை 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மிக அதிகம். அவர்கள் தான் தற்போது பல்வேறு மாநிலங்களில் அரசியல் புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். வேலைவாய்ப்பு, நகர்ப்புற வளர்ச்சி, தங்களது குழந்தைகளின் எதிர்காலம் என பல்வேறு சிந்தனைகளோடு வாக்காளர்கள் வாக்களிக்க வருகின்றனர் என்ற மனநிலையை மிகத் துல்லியமாக புரிந்து கொண்ட பிரசாந்த் கிஷோர் தனது முதல் தேர்தலில் அவர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றிருப்பதை சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் சாதியை பற்றி பேசாமல், ஆட்சி, கல்வி, வேலை வாய்ப்பு, நிர்வாகம், ஊழல், உள்ளூர் பிரச்சனைகள் பற்றி பேசியது புதிய தலைமுறையின் ஆதரவை அவர்களுக்கு பெற்று தந்தது என்கின்றனர்.

குறிப்பாக இடைத்தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் பீகாரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி மீதான வெறுப்பை இந்த தேர்தலில் வாக்குகளாக பதிவு செய்திருக்கின்றனர். டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட அனுபவத்தால் ஏற்பட்ட கோபத்தை வாக்குச்சாவடியில் வாக்குகளாக மாற்றும் முயற்சியில் ஜன் சூரஜ் கட்சி தீவிரமாக செயல்பட்டது.

குறிப்பாக தமிழகத்தை போலவே சமூக ஊடகங்கள் மூலம் "கோபத்தை வெளிப்படுத்தாமல் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்" என்ற முழக்கத்தை முன்னெடுத்தது, அந்த அணுகுமுறை தான் அவர்களுக்கு மிகப்பெரிய பலமாக மாறியதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்லுகின்றனர். ஏற்கனவே சொன்னது போல பங்கிப்பூர் தொகுதி 1995 முதல் பாஜக வென்று வந்த இரும்புக்கோட்டை. மேலும் பாஜக தேசிய தலைவராக இருந்த நிதின் நபின் எம்எல்ஏவாக இருந்த தொகுதி இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக தான் பாஜக தனது வேட்பாளரை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பாஜகவுக்கு தன்னம்பிக்கை குறைந்து விட்டது என்ற ஒரு பிம்பத்தை பிரசாந்த் கிஷோர் உருவாக்கினார். அதனை தனது பிரச்சாரத்திலும் திறமையாக கையாண்டார். மேலும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் போது ஏற்பட்ட இளைஞர்களின் அதிருப்தியை தனது அரசியல் ஆயுதமாக ஜான் சூரஜ் மாற்றிக் கொண்டது. ஆனால் பாஜக அதில் பின்னடைவை சந்தித்தது.

இது மட்டுமல்லாமல் பீகார் அரசியலில் பல ஆண்டுகளாக எம் - ஒய் பார்முலா எனப்படும் இஸ்லாமிய யாதவ் கூட்டணி பலமாக இருந்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் இளைஞர்கள் முதல் முறை வாக்காளர்கள், நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், யார் மாற்றத்தை தருவார்கள் என்ற கேள்விக்கு முக்கியத்துவத்தை கொடுத்தனர். அதனால்தான் இந்த எம்-ஐ பார்முலா தோல்வி அடைந்ததாக சொல்கின்றனர்.

இந்த இடைத்தேர்தலில் மற்ற இரண்டு தொகுதிகளின் முடிவுகள் பெரும்பாலும் எதிர்பார்த்தபடி தான் அமைந்தது . ஆனால் வங்கிப் தொகுதி மட்டும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்து வந்த ஒரு நபர் நேரடியாக அரசியலுக்குள் நுழைந்து ஒரு தேசிய கட்சியின் பலமான கோட்டையை உடைத்து முதல் வெற்றியை பெற்றிருக்கிறார். இதன் மூலம் சாதி, மத அரசியல் எப்போதும் நிரந்தரமானது அல்ல.. இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளும் கட்சிகள் தான் இனி அரசியலை வழி நடத்தும் என்ற செய்தியை சொல்லாமல் சொல்லி இருக்கிறது பங்கிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+