பிரதிமா பௌமிக்.... திரிபுராவை சேர்ந்தவருக்கு முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்
டெல்லி: மத்திய அமைச்சரவையில் திரிபுரா எம்.பி.யான பிரதிமா பௌமிக் இடம்பெற்றுள்ளார். திரிபுராவில் பிறந்த ஒருவருக்கு முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
திரிபுரா மாநிலமானது இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. இம்மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸை கூண்டோடு பாஜக வளைத்தது.
இதனால் 2018 சட்டசபை தேர்தலில் பாஜக, திரிபுராவில் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் உட்கட்சி மோதல்களால் திரிபுரா பாஜக அரசுக்கு கடும் நெருகக்டி ஏற்பட்டுள்ளது. அதுவும் மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் மமதா பானர்ஜி ஆட்சியை பிடித்ததால் திரிபுரா பாஜக எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போவதாக மிரட்டல் விடுத்தனர். திரிபுராவில் வங்கமொழி பேசுவோர் கணிசமாக உள்ளனர்.
அத்துடன் திரிபுராவில் பழங்குடி வாக்காளர்கள், ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் திரிபுராவில் இருந்து முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்வான பிரதிமா பெளமிக், மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். திரிபுராவில் பிறந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

அதேநேரத்தில் திரிபுரா எம்.பி.யாக இருந்த பிற மாநிலத்தவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். இந்திரா காந்தி அமைச்சரவையில் திரிகுண சென், கல்வி அமைச்சராக இருந்தார். இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்; திரிபுராவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மேற்கு திரிபுரா லோக்சபா தொகுதியில் வென்ற அஸ்ஸாமை சேர்ந்த சந்தோஷ் மோகன் தேவ், ராஜீவ்காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றார்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 2-வது பெண் என்ற பெருமையும் பிரதிமா பெளமிக் பெற்றுள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில் அஸ்ஸாமின் பிஜயா சக்கரவர்த்தி இடம்பெற்றிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications