Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்வானி, எம்எஸ் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்கிய ஜனாதிபதி முர்மு.. விருது பட்டியல் இதோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எம்.எஸ்.சுவாமிநாதன், எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்துள்ளார்.

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தையும், வேளாண் விஞ்ஞானியுமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த பிப்ரவரி 9ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா உணவுப் பஞ்சத்தில் தவித்தபோது பசுமைப் புரட்சியை முன் நின்று நடத்தி நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்தான் எம்.எஸ்.சுவாமிநாதன். அவரது உழைப்புக்கும், தொண்டுக்கும் 'பாரத ரத்னா’ விருது சிறந்த அங்கீகாரமாகும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

President Draupadi Murmu honoured with the Bharat Ratna Award in Delhi today

ஆனால், எல்.கே.அத்வானி, மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் கர்பூரி தாக்குருக்கு விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. அதாவது பாஜகவின் கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் இதுவரை வெறும் 7 பேருக்கு மட்டுமே பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் தேர்தல் நடைபெறும் 2024ம் ஆண்டில் மட்டும் 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.

President Draupadi Murmu honoured with the Bharat Ratna Award in Delhi today

இதில் அத்வானி தவிர மற்ற தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்த தலைவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ் மற்றும் சோசலிஸ்ட் தலைவர்களாவார்கள். இருப்பினும் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டே இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

இன்னும் விளக்கமாக சொல்வதெனில் பீகாரில் பாஜக செல்வாக்கை பெருக்க கர்பூரி தாக்கூருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல உத்தரப் பிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர 170 நாட்கள் பிரதமர் பதவியை வகித்த சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.

ஆந்திராவில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு விருது அறிவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.

இந்நிலையில் இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. நரசிம்ம ராவ், சரண் சிங் குடும்பத்தினர் இன்று குடியரசுத் தலைவரிடமிருந்து விருதை பெற்றுக்கொண்டனர். அதேபோல எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினர் விருதை பெற்றுக்கொண்டனர். கர்பூரி தாக்குருக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+