Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம்.. யார் இவர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபா இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிறப்பித்துள்ள நிலையில் பர்த்ருஹரி மஹ்தப் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நாட்டில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மொத்தம் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19 முதல் ஜுன் 1ம் தேதி வரை லோக்சபா தேர்தல் நடந்தது. ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

lok sabha speaker lok sabha bjp

அதாவது மத்தியில் தனித்து ஆட்சியை பிடிப்பதற்கு தேவையான 272 எம்பிக்களை எந்த கட்சிகளும் பெறவில்லை. இதனால் 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான பாஜக தனது கூட்டணி கட்சிகளின் 52 எம்பிக்களின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி உள்ளார்.

மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உள்பட 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளுக்கு தலா 2 கேபினட் அமைச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் புதிதாக தேர்வான எம்பிக்கள் பதவியேற்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டம் வரும் ஜுன் 23ம் தேதி கூட உள்ளது. எம்பிக்கள் பதவியேற்கும் வகையில் இடைக்கால சபாநாயகர் நியமனம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அதன்படி இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளார்.

இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ள பர்த்ருஹரி மஹ்தாப் முன்னிலையில் தான் பிரமதர் மோடி உள்பட அனைத்து எம்பிக்களும் லோக்சபாவில் பதவியேற்க உள்ளனர். இதற்கிடையே தான் பர்த்ருஹரி மஹ்தாப் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இடைக்கால சபாநாயகராக தேர்வாகி உள்ள பர்த்ருஹரி மஹ்தாப் ஒடிசாவை சேர்ந்தவர். இவர் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டு வந்தார். இவர் கட்டாக் தொகுதி எம்பியாக உள்ளார். இவர் கடந்த 1998 முதல் கட்டாக் தொகுதி எம்பியாக தொடர்ந்து வருகிறார்.

1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கட்டாக் தொகுதியில் பிஜு ஜனதாதளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின்போது அவர் பிஜு ஜனதாதளம் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜக சார்பில் மீண்டும் கட்டாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாகி உள்ளார்.

7 வது முறையாக எம்பியாகி உள்ள பர்த்ருஹரி மஹ்தாப் லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. அதேவேளையில் தற்போது மத்தியில் பாஜக தனித்து ஆட்சியை பிடிக்காமல் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதனால் சபாநாயகர் பதவியை பிறகட்சியில் இருந்து வந்த பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு வழங்க வேண்டாம் என்று பாஜக மேலிட தலைவர்களின் ஒருபகுதியினர் கூறியதாகவும் சொல்லப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் தற்போது பர்த்ருஹரி மஹ்தாப் லோக்சபா இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவருக்கு லோக்சபா சபாநாயகர் பதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பெரும்பாலும் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்படுபவர்கள் 5 ஆண்டுக்கான நிரந்தர சபாநாயகராக நியமனம் செய்யப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+