‛‛அயோத்தி ராமர் கோவிலுக்கு வாங்க’’.. ஜனாதிபதி முர்முவுக்கு நேரில் அழைப்பு.. அழைத்து யாரு தெரியுமா?
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார்.

மேலும் இந்த விழாவில் வெளிநாடுகளை சேர்ந்த தூதர்கள், கோவில் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட கரசேவகர்களின் குடும்பத்தினர், மடாதிபதிகள், சாமியார்கள் என 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும்படி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான அழைப்பிதழை ராமர் கோவில் கட்டுமான மேற்பார்வை கமிட்டி தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயற்குழு தலைவர் அலோக்குமார், ஆர்எஸ்ஆர் அமைப்பை சேர்ந்த ராம்லால் உள்ளிட்டோர் ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி அழைத்தனர்.












Click it and Unblock the Notifications