வாக்கு திருட்டு என்றால் ஆதாரம் கொடுங்க.. ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்களிடம் நேரடியாக கேட்ட ஜனாதிபதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்தியா கூட்டனி எம்பிக்கள் இன்று பேரணியாக சென்று சந்தித்து பேசினர். மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்டோர் ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களின் பேசிய ராகுல் காந்தி, ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை மறுக்காதது தங்களுக்கு வியப்பை கொடுத்ததாகவும், எனினும், வாக்கு திருட்டுக்கான ஆதாரங்களை தருமாறு கேட்டதாகவும் கூறினார். மம்தா பானர்ஜி கூறுகையில், 'எங்கள் மனுவை விசாரிப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார்' என்றார்.

President Droupadi Murmu

பேரணியாக சென்று திரவுபதி முர்முவை சந்தித்தனர்

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இருந்து ராஷ்டிரபதி பவன் வரை பேரணியாக சென்றனர். தொடர்ந்து ராகுல் காந்தி உள்ளிட்ட சில எம்பிக்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க சென்றனர். அப்போது கடமை பாதையில் அமர்ந்த எம்பிக்கள், ஞானேஷ் குமாருக்கு எதிராக வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இருந்தனர்.

President Droupadi Murmu

வடிவமைத்தது மோடி, செயல்படுத்தியது அமித்ஷா

வாக்கு திருட்டு எனவும், தேர்தல் ஆணையத்திற்கும் பாஜக தலைமையிலான மோடி அரசுக்கும் இடையே கூட்டு இருப்பதாகவும் கூறப்பட்ட பதாகைகளை கையில் வைத்து இருந்தனர். ஜனாதிபதியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:- வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த தேசமும் அறிந்துள்ளது. இதை வடிவமைத்தவர் நரேந்திர மோடி. அமித்ஷாவும் ஞானேஷ் குமாரும் அதனை செயல்படுத்தியுள்ளனர்.

இந்த உண்மையை ஜனாதிபதி மறுக்கவில்லை. நாங்கள் கூறியது பற்றி கேள்வி எழுப்பவில்லை. வாதமும் செய்யவில்லை. எங்கள் கருத்துகளை அவர் ஏற்றுக்கொண்டார். பிறகு, வாக்கு திருட்டுக்கான ஆதாரம் தனக்கு தேவை என்று அவர் எங்களிடம் கேட்டார். வாக்கு திருட்டுக்கான ஆதாரத்தை மொத்த தேசமும் அறியும் என்று நான் கூறினேன். ஒவ்வொரு மாநிலமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மறுப்பார் என்று எதிர்பாத்தேன்

கடந்த 2024 தேர்தலிலும் திருடப்பட்டுள்ளது. இருந்தாலும் தன்னிடம் ஆதாரத்தை சமர்பிக்குமாறு ஜனாதிபதி கூறினார். தேர்தல் திருட்டு தொடர்பாக நாங்கள் சேகரித்துள்ள ஆதாரங்களை, ஜனாதிபதி பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, இதே மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். வாக்கு திருட்டு குற்றச்சாட்டை ஜனாதிபதி மறுப்பார் என்று எதிர்பாத்தேன்.

எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கூறியதை அவர் ஏற்றுக்கொண்டதால் நாங்கள் வியப்பு அடைந்தோம்" என்றார். ஜனாதிபதியை சந்தித்த நிலையில், நாளை தலைமை நீதிபதி சூர்யகாந்தை சந்தித்து, வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக குறிப்பாணையை வழங்க உள்ளதாக ராகுல் காந்தி கூறினார். மம்தா பானர்ஜி கூறுகையில், 'எங்கள் மனுவை விசாரிப்பதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறினார்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+