"அசோக சக்கரம், அரசியலமைப்பு புத்தகம்!" சுப்ரீம் கோர்ட்டின் புதிய கொடி.. இதை எல்லாம் நோட் பண்ணீங்களா
டெல்லி: நமது நாட்டில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அதை நினைவுகூரும் வகையில் சுப்ரீம் கோர்ட்டின் புதிய கொடி மற்றும் சின்னத்தை நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டு டெல்லியில் நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு: இதற்கிடையே இந்த தேசிய மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதித்துறை அமைப்பின் காவலாளியாக உச்ச நீதிமன்றம் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளதாக அவர் பாராட்டினார்.
ஜனாதிபதி பேச்சு: இந்த மாநாட்டில் திரௌபதி முர்மு மேலும் பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் காரணமாக இந்திய நீதித்துறை மிகவும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளது. சுப்ரீம் கோர்ட் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, நமது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தப் பல திட்டங்களை உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிபதியையும் மக்கள் கடவுளாகக் கருதுகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு நீதிபதியும் தர்மம், உண்மை மற்றும் நீதியை மதிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. நமது நாட்டின் கோடிக் கணக்கான மக்களின் நீதித்துறை மீதான நம்பிக்கையை மாவட்ட நீதிமன்றங்கள் தான் தீர்மானிக்கின்றன. மக்களுக்கு நீதியை விரைவாகவும் குறைந்த செலவிலும் வழங்குவதே நமது நீதித்துறையின் வெற்றியின் அடிப்படையாகும்.
"மரியாதை வேண்டும்!" தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்து! சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி
வேதனை: கடந்த சில ஆண்டுகளில் மாவட்ட அளவில் நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இன்னும் நாம் பல வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. குறிப்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் நீதித்துறைக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. 32 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூட சில வழக்குகள் நிலுவையில் இருப்பது வேதனை தருகிறது.

நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து வைக்கச் சிறப்பு லோக் அதாலத் வாரம் போன்ற நிகழ்ச்சிகள் நல்ல பலன் தருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்ய வேண்டும். நீதி என்பது நமது நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். உள்ளூர் மொழியிலும் நீதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணைந்து செயல்பட வேண்டும்: பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதித்துறை, அரசு மற்றும் போலீஸ் நிர்வாகம் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், புதிய குற்றவியல் நீதிச் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், நமது நீதித்துறை ஒரு புதிய நீதி சகாப்தத்தைப் படைக்கும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொடி அறிமுகம்: முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த நிகழ்ச்சியில் தான் சுப்ரீம் கோர்ட்டின் கொடியை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அசோக சக்கரம், உச்ச நீதிமன்ற கட்டிடம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ஆகியவற்றுடன் நீல நிறத்தில் உச்ச நீதிமன்றத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட பல நீதிபதிகள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications