lpg cylinder price: நாளை முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயருகிறது.. பொதுமக்கள் ஷாக்!
டெல்லி: டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நாளை முதல் 50 ரூபாய் உயர்வதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது,.
இதன்படி டெல்லியில் நாளை நள்ளிரவு முதல் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 769 ரூபாய் ஆக உயர்த்தப்பட உள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது.
டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயரும் என்றே கூறப்படுகிறது. இதன்படி சென்னை, மும்பை, கொல்கத்தா உள்பட நாட்டின் மற்ற பெருநகரங்களிலும், நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள விலையில் கூடுதலாக நாளை முதல் 50 உயரலாம் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.

15 நாள் ஒருமுறை
ஏனெனில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி 16ம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுவதால் அதன் விலை தினசரி கூடுவதாகவே உள்ளது. இதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு சிலிணடர் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்வை சந்திக்கிறது.

610ல் இருந்து உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அண்மைக்காலத்தில் குறைந்ததாக தகவல்கள் இல்லை. ஆனால் தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டம அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்தது. நாளை 50 ரூபாய் உயர்ந்தால் 785 ரூபாய் என்ற விலைக்கு விற்கப்படவாய்ப்பு உள்ளது.

இப்போது விலை
இந்த மாத தொடக்கத்தில் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சமையல் எரிவாயுவின் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டதால் டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.719 ஆகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும், மும்பையில் ரூ.719 ஆகவும், சென்னையில் ரூ.735 ஆகவும் விற்கப்பட்டது. இனி இதன் விலைகள் எல்லாமே நாளை முதல் மாறப்போகிறது. டிசம்பர் 1ம் தேதி 610ல் இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.735 ஆக உள்ளது. இனி 785 ரூபாய் ஆக வாய்ப்பு உள்ளது. என்ன விலை என்பது டிசம்பர் 16ம் தேதி காலை தெரிந்துவிடும்.

என்ன விலை
தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சென்னையில் இம்மாத தொடக்கத்தில் 191 உயர்ந்து ரூ.1649க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிஅதன் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் திருத்தி அமைத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications