"லைஃப் டைம் செட்டில்மெண்ட்!" வீட்டின் அருகே இந்த வண்டு மட்டும் இருந்தால் போதும்.. அப்படி என்ன ஸ்பெஷல்
டெல்லி: நம் அனைவருக்கும் ஓவர் நைட்டில் பெரிய பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்யும். எதாவது ஒரு அதிர்ஷ்டம் நம்மை தூக்கிவிடாதா என்றே பலரும் நினைப்பார்கள்.. அப்படி நினைக்கும் நபர் நீங்கள் என்றால் உங்கள் வீட்டின் அருகே இந்த டைப் பூச்சி இருக்கா எனப் பாருங்கள். ஒரு பூச்சி கண்டுபிடித்தாலும் லைஃப் டைம் செட்டில்மென்ட் தான்.
ஓவர் நைட்டில் பணக்காரர் ஆக வேண்டும் என விரும்புவோர் இந்த பூச்சி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தாலோ அல்லது நீங்கள் எங்கேயாவது இதைப் பார்த்தாலோ விட்டு விடாதீர்கள்.. ஏனென்றால் இந்த பூச்சி உங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்டை பெற்றுத் தந்துவிடும்.

பூச்சி: இந்த ஒரு பூச்சி உங்களிடம் இருந்தால் அதை ரூ.75 லட்ச ரூபாய் வரை கொடுத்து வாங்கி செல்ல ஆட்கள் ரெடியாக உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? எது ரூ.75 லட்சமா.. அப்படி என்ன பூச்சி.. இதற்கு ஏன் இவ்வளவு மவுசு எனக் கேட்கிறீர்களா.. வாங்கப் பார்க்கலாம்.. உலகின் விலையுயர்ந்த பூச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுவது தான் இந்த 'ஸ்டாக் பீட்டில்'.
ஸ்டாக் வண்டு: இந்த ஸ்டாக் வண்டு மிகவும் விலை உயர்ந்தது.. ஏனென்றால் இது மிகவும் அரிதானது.. மேலும், இந்த வண்டுக்குத் தணியாக அதிர்ஷ்டம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த ஸ்டாக் பீட்டிலை வைத்திருக்கும் ஒருவர் ஓவர் நைட்டில் பணக்காரர் ஆகலாம் என்றும் பலரும் நம்புகிறார்கள். மேலும், இந்த பூச்சிகள் வன சுற்றுச்சூழலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன் விரிவான தாடைகள் இதைத் தனித்துவமாகக் காட்டுகிறது.
இந்த பூச்சிகள் 2-6 கிராம் எடையுள்ளவை.. சராசரியாக 3-7 ஆண்டுகள் மட்டும் இந்த பூச்சிகள் வாழும்.. இதில் ஆண் பூச்சிகள் 35-75 மிமீ, பெண் பூச்சிகள் நீளம் 30-50 மிமீ நீளம் கொண்டவையாக இருக்கும்.. இந்த வகை ஸ்டாக் பீட்டில் மருத்துவச் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தனித்துவம்: ஸ்டாக் பீட்டில் பூச்சிகளில் ஆண் வண்டுகளில் தனித்தனி தாடைகள் காணப்படும். ஆண் ஸ்டாக் வண்டுகள் இனப்பெருக்க காலத்தில் பெண் வண்டுகளுடன் இணைய இந்த தனித்துவமான, கொம்பு போன்ற தாடைகள் தான் பயன்படும். இதன் காரணமாகவே அந்த வண்டுகளுக்கு ஸ்டாக் பீட்டில் என்ற பெயர் வந்தது.
எங்கு இருக்கும்: ஸ்டாக் வண்டுகள் சூடான, வெப்பமண்டல பகுதிகளில் தான் செழித்து வளரும்.. இந்த வண்டுகளுக்குக் குளிரான வெப்ப நிலை ஒத்துவராது. அவை இயற்கையாகவே வனப்பகுதிகளில் வாழும்.. மரக்கட்டைகள், பழத்தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் போன்ற நகர்ப்புறங்களிலும் காணப்படுகின்றன. அதாவது இறந்த மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இவை அதிகம் காணப்படும். இந்தியாவில் இவை காணப்படும்.
மரத்தின் பட்டைகள், பழங்களிலிருந்து வரும் சாறு ஆகியவை தான் இந்த ஸ்டாக் வண்டுகளின் உணவாகும். இந்த வண்டுகள் லாவா அதாவது இளம் காலத்தில் அதிக எனர்ஜியை பெறும். அப்போது அவை பெறும் எனர்ஜி வாழ்நாள் முழுவதும் பயன்படும்.
ஆபத்து இல்லை: ஸ்டாக் வண்டுகளின் லார்வாக்கள் இறந்த மரத்தை உண்கின்றன.. அவற்றின் கூர்மையான தாடைகளைப் பயன்படுத்தி நார்ச்சத்துள்ள மரத்தின் மேற்பரப்பைப் பிரித்தெடுத்துச் சாப்பிடும். குறிப்பாக அவை இறந்த நிலையில் இருக்கும் மரத்தைத் தான் சாப்பிடும். இந்த ஸ்டாக் வண்டுகளால் நல்ல வளர்ந்து வரும் மரங்கள் அல்லது செடிகளுக்கு ஆபத்து இல்லை.. ஆரோக்கியமான தாவரங்களை இவை சீண்டாது
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை












Click it and Unblock the Notifications