ஆதரவு கடிதம் வழங்கிய நிதிஷ், சந்திரபாபு நாயுடு.. என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு
டெல்லி: மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தயாராகி வரும் நிலையில், இன்று எண்டிஏ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3வது முறையாக பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், பாஜக இந்த முறை கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தயவு தற்போது பாஜகவுக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணிக்கு 292 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் உள்ளன. பிற கட்சிகள் 17 இடங்கள் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு எண்ணிக்கை இல்லை என்றாலும் கூட பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டோம் என்றும் அதற்கான வியூகங்கள் எங்களிடம் உள்ளன என்றும் கூறி வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சிக்கலாம் என்று சொல்லப்படுவதால் வாக்கு எண்ணிக்கை முடிந்ததில் இருந்து தேசிய தலைநகரில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. மோடி வரும் 8 ஆம் தேதி பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் மோடி இல்லத்தில் தேசியஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக 3வது முறையா மோடி தேர்வு செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் மூலம் எழுதிகொடுத்துள்ளனர். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க தேசிய ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 15 கட்சிகளின் ஆதரவை அடுத்து பிரதமர் மோடியை தலைவராக தேர்வு செய்து தீன்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவராக பிரதமர் மொடி ஒருமனதாக இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தயாராகி வரும் நிலையில், இன்று எண்டிஏ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3வது முறையாக பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
-
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications