டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நள்ளிரவில், டெல்லியில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார் பிரதமர் மோடி.. ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாள் பயணம்

பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு ஜெர்மனி புறப்பட்டு சென்றார்

Google Oneindia Tamil News

டெல்லி: ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.. இதற்காக நேற்றிரவு அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.. இதில், முதலில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில், பிரதமர் ஓலாப் ஷோல்சை சந்திக்கிறார்.

பிறகு 6வது இந்தியா - ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான இரு தரப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மேக் இன் இந்தியா - ஹேட் இன் இந்தியா ஒன்றாக இருக்க முடியாது! பட்டியலிட்டு மோடியை விளாசும் ராகுல் மேக் இன் இந்தியா - ஹேட் இன் இந்தியா ஒன்றாக இருக்க முடியாது! பட்டியலிட்டு மோடியை விளாசும் ராகுல்

ஜெர்மனி

ஜெர்மனி

பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார விஷயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜெர்மனியை தொடர்ந்து டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்சன் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி மே 3, 4 ஆகிய தேதிகளில் கோபன்ஹேகன் நகருக்குச் செல்கிறார்..

 உச்சிமாநாடு

உச்சிமாநாடு

அங்கிருந்து டென்மார்க் சென்று நார்டிக் நாடுகளுடனான உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.. இறுதியாக பாரீஸ் சென்று புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் இம்மானுவேல்மேக்ரானை சந்திக்கிறார்.. இந்தியாவும் பிரான்சும் கடந்த 75 ஆண்டுகால நட்பு உறவுகளைக் கொண்டாடுகின்றன..

இந்தியா

இந்தியா

மேலும் இந்த மாத தொடக்கத்தில் சமீபத்தில் மீண்டும் பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மாக்ரோன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி 3நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடுகிறார் பிரதமர் மோடி.

அமைச்சகம்

அமைச்சகம்

அந்தந்த நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்க போகிறார். இதைதவிர, சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாட உள்ளார்... வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.. நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Modi travels to Germany and three days three Europe countries பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு ஜெர்மனி புறப்பட்டு சென்றார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X