வங்கதேச அரசியல் குழப்பம் குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை! தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேரில் விளக்கம்
டெல்லி: வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாகப் பிரதமர் இல்லத்தில் பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி கூடி ஆலோசனை செய்து வருகிறது. வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறை காரணமாக ஏற்கனவே எல்லையில் உள்ள பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசீனா இந்தியாவிற்கு வந்துள்ளார்.

ஆலோசனை: இதற்கிடையே வங்கதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் தொடர்பாகப் பிரதமர் இல்லத்தில் பாதுகாப்பிற்கான கேபினட் கமிட்டி ஆலோசனை கூடி ஆலோசனை செய்து வருகிறது. வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறை காரணமாக ஏற்கனவே எல்லையில் உள்ள பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், அமித் ஷா மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ஜெய்சங்கர்: முன்னதாக வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் விளக்கினார். இது மட்டுமின்றி மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் ஜெய்சங்கரிடம் வங்கதேச விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
வங்கதேசத்தைப் பொறுத்தவரைக் கடந்த 2009 முதலே அங்கே ஹசீனா தான் பிரதமராக இருந்து வருகிறார். இந்தாண்டு நடந்த பொதுத் தேர்தலிலும் கூட அவரே வென்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த பொதுத்தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக மேற்குலக நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன. இருப்பினும், அது குறித்தெல்லாம் ஹசீனா எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.
போராட்டங்கள்: இந்தச் சூழலில் தான் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் ஹசீனாவுக்கு எதிராக மிக பெரியளவில் போராட்டங்கள் நடந்தன. முதலில் அங்குச் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு எதிராகவே போராட்டங்கள் தொடங்கின. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மாணவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிவிட்டன. அதன் பிறகு போராட்டங்கள் சற்று ஓயும் என்றே எதிர்பார்க்கப்பட்டன.
இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அங்கே மீண்டும் வன்முறை வெடித்தது. போராட்டங்களை ஒடுக்க ஹசீனா அரசு கடுமையாக முயன்றது. ஆனாலும் அதற்குப் பலன் இல்லை. இதில் பல நூறு பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டன. இந்தச் சூழலில் தான் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அந்நாட்டு ராணுவம் கெடு விதித்தது.
ராணுவ ஆட்சி: இதைத் தொடர்ந்து ஹசீனா ராஜினாமா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தகவலை நாட்டு மக்களிடம் அறிவித்த வங்கதேச ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான், தற்காலிக அரசை ராணுவம் அமைக்கும் என்றார். அதேநேரம் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
இந்தச் சூழலில் தான் ஷேக் ஹசீனா தனது சகோதரியுடன் அந்நாட்டின் விமானப்படைக்குச் சொந்தமான C-130 ராணுவ விமானத்தில் வங்கதேசத்தில் இருந்து கிளம்பினார். அந்த விமானம் இன்று மாலை டெல்லிக்கு அருகே காசியாபாத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. அதைத் தொடர்ந்து ஹசீனாவை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். ஹசீனா தற்போது இந்தியா வந்திருந்தாலும் அவர் நீண்ட காலம் இங்கு இருக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது.. அவர் விரைவில் லண்டனில் தஞ்சம் புக இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications