எல்லையில் உற்று கண்காணிக்கும் 'டிராகன்' சீனா.. பூட்டான் புறப்பட்டார் பிரதமர் மோடி!
டெல்லி: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பூட்டான் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக மோசமான வானிலை காரணமாக நேற்று பூட்டான் பயணத்தை பிரதமர் மோடி ஒத்திவைத்திருந்தார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டான் மிக முக்கியமான எல்லை நாடு. சீனாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நாடு பூட்டான். இந்த நாட்டின் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை சீனா ஒருபோதும் விரும்பியது இல்லை.

இந்தியா- சீனா- பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பீடபூமியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பது சீனாவின் நோக்கம். ஆனா; பூட்டான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதி இந்திய ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் இந்திய ராணுவத்தினருடன் சீனா மோதலில் ஈடுபட்டு இருநாடுகளிடையே போர் பதற்றமும் உருவாகியது.
டோக்லாம் பீடபூமி என்பது இந்தியாவின் இதர நிலப்பகுதிகளை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கக் கூடிய முக்கியமான பகுதி. இதனால் இதற்கு கோழி கழுத்துப் பகுதி- சிக்கன் நெக் என்ற பெயரும் உண்டு. இதனால்தான் டோக்லாம் பீடபூமி மீது சீனா அதீத கவனம் செலுத்தி வருகிறது.
இந்த பின்னணியில் பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்நிலை பரிமாற்றங்களின் பாரம்பரியம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அரசின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி நேற்று பூட்டான் பயணம் மேற்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்று காலை பூட்டான் நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தப் பயணத்தை சீனா மிக உன்னிப்பாக கவனிக்கவும் தொடங்கியுள்ளது.
பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஆகியவற்றில் வேரூன்றியுள்ள இந்தியாவும், பூடானும் தனித்துவமான மற்றும் நீடித்த கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது ஆன்மீக பகிரும் பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இடையேயான அன்பான உறவுகள் நமது தனித்துவமான உறவுகளுக்கு வலுவையும் உற்சாகத்தையும் சேர்க்கின்றன. இந்தப் பயணம் இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், நமது மக்களின் நலனுக்காக நமது முன்மாதிரியான கூட்டாண்மையை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்கிற எதிர்பார்ப்பு இருநாடுகளிடையே இருந்து வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications