டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பவே "அரசியலமைப்பு" இருந்திருக்கு! தமிழ்நாடு உத்திரமேரூர் கல்வெட்டு! புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

பழங்குடியின மக்களுக்கும், அவர்களுக்காக பணியாற்றியவர்களுக்கும் இந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று நாட்டு மக்களிடையே 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலமாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டில் கிராம ஊராட்சி தேர்தல் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதால் இது சிறிய அரசியலமைப்பை போல இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி வாயிலாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டின் முதல் உரையாடலை இன்று நிகழ்த்தியுள்ளார். இது அவருடைய 97வது உரையாகும். இதில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட பத்ம விருதுகள் குறித்து விரிவாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "இந்த ஆண்டு பத்ம விருதுகளை பெற்றவர்களில் கணிசமானோர் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராவார்கள்.

பழங்குடியினரின் வாழ்க்கையானது நகர மக்களின் வாழ்க்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதில் அவர்கள் பெரும் சவால்களை சந்தித்தாலும், தங்களுடைய பாரம்பரியத்தை பாதுகாக்க எப்போதும் முன்னிற்கிறார்கள். டோட்டோ, ஹோ, குய், கூவி, மந்தா போன்ற பழங்குடியின மக்களின் மொழிகள் குறித்து பணியாற்றியவர்கள் பத்ம விருது பெற்றிருக்கிறார்கள். அதேபோல சித்தி, ஜார்வா, ஓங்கே பழங்குடியினருக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது நம் அனைவருக்கும் பெருமையாகும்.

கொல்கத்தாவில் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியீடு! டெல்லி பல்கலை வெளியே 144 தடை உத்தரவு! கொல்கத்தாவில் பிரதமர் மோடி குறித்த ஆவணப் படம் வெளியீடு! டெல்லி பல்கலை வெளியே 144 தடை உத்தரவு!

விழாக்கள்

விழாக்கள்

இது மட்டுமல்லாது நக்சல்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அவர்களால் வழிதவறி சென்று பின்னர் சில நல்ல உள்ளங்களால் மீட்கப்பட்டு சரியான பாதையில் இளைஞர்கள் பலர் பயணித்துள்ளனர். இந்த நல்ல உள்ளங்களுக்கம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "பொதுவாகவே ஜனவரி மாதம் விழாக்கள் நிறைந்த மாதமாகும். இந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதியன்று நாட்டின் கிழக்கிலருந்து மேற்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டன. விழாக்களால் நாடு மூழ்கி இருந்தது.

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்

இந்த ஆண்டு சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டு. அந்த வகையில் சிறுதானியங்களை ஊக்குவிப்பதற்காக தங்களது வாழ்கையை பலர் அர்ப்பணித்துள்ளனர். Milletpreneurs எனும் வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஒடிசாவின் பழங்குடி மாவட்டமான சுந்தர்கரில் உள்ள பெண்கள் சுயஉதவி குழுக்களை அடையாளப்படுத்துவதுதான் இந்த பெயர். இவர்கள் சிறுதானியங்களிலிருந்து பிஸ்கெட், கேக் போன்ற உணவு பண்டங்களை தயாரிக்கின்றனர். இப்படியும் சிறுதானியங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லலாம். அவர்களை இங்கு நினைவுகூர்வதில் பெருமையடைகிறேன்" என்று கூறினார்.

உத்திரமேரூர்

உத்திரமேரூர்

மேலும், உத்திரமேரூர் கல்வெட்டு குறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் எல்லோரும் அறிந்த ஒரு கிராமம்தான் உத்திரமேரூர். இங்குள்ள ஒரு கல்வெட்டு உலகையே வியக்கவைக்கிறது. இந்த கல்வெட்டை ஒரு சிறிய அரசியலமைப்பு என்று கூறலாம். சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு செயல்பட்டு வந்த கிராமசபை அமைப்பு முறை குறித்து இந்த கல்வெட்டில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கிராமசபை எப்படி செயல்பட வேண்டும். உறுப்பினர் தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை குறித்து இக்கல்வெட்டு விரிவாக கூறுகிறது. இதனால்தான் இதனை உலகம் வியந்து பார்க்கிறது என்று சொன்னேன்.

கர்நாடகா

கர்நாடகா

இதேபோல கர்நாடகாவில் கட்டப்பட்டிருக்கும் பசவேஸ்வரா ஆலயத்தில் அனுபவ மண்டபம் என்று ஒரு மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் சிறப்பு என்னவெனில் எவர் ஒருவரும் இந்த மண்டபத்தில் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து விவாதிக்கலாம் என்பதுதான் இதன் சிறப்பு. 12ம் நூற்றாண்டிலேயே தங்கள் அனுபவம் குறித்து விவாதிக்க மண்டபம் கட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் கூறியுள்ளார்.

English summary
Prime Minister Narendra Modi speaking through 'Voice of the Mind' program today said, "The Uttaramerur inscription of Tamil Nadu is like a small constitution as there are mentions of village panchayat elections."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X