முதல் முறையாக புருனே செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். நரேந்திர மோடிதான் புருனே செல்லும் முதலாவது இந்திய பிரதமர். இந்தியா- புருனே இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைகிறது. இதேபோல சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

இந்தியா- புருனை நாடுகளிடையேயான தூதரக உறவுகள் 1984-ல் தொடங்கப்பட்டன. இருநாடுகளிடையேயான அரசு முறை உறவின் 40-ம் ஆண்டு தற்போது நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா பங்கேற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொள்கிற முதலாவது பயணம் இது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.

india burnei

மேலும் பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறார். இந்த பயணம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், இருநாடுகளின் உறவில் புதிய ஒத்துழைப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளில் சிங்கப்பூருடனான இந்தியாவின் வர்த்தக உறவு மிக முக்கியமானது. உலக அளவில் இந்தியாவுடன் அதிகமான வர்த்தக உறவுகளைக் கொண்ட 6-வது நாடு சிங்கப்பூர். இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூர், இந்தியாவில் 11.77 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பயணத்தின் போது பல்வேறு சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+