மக்கள் மனங்களில் வாழ்பவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன்… மன் கீ பாத்தில் பிரதமர் மோடி புகழாரம்
டெல்லி: சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் மருத்துவர் ஜெயச்சந்திரன் என்று 5 ரூபாய் மருத்துவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டின் பிரதமரான மோடி அகில இந்திய வானொலி வழியாக மக்களிடையே பேசி வருகிறார். நாட்டின் தற்போதைய நிலை, அரசியல் சூழல், மக்களுக்கான திட்டங்கள் உரையாற்றி வருகிறார்.
மனத்தின் குரல் என்று தமிழிலும், மன் கீ பாத் என்ற இந்தியிலும் அந்த நிகழ்ச்சிக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் வழக்கம் போல் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

ஜெயச்சந்திரனின் அர்ப்பணிப்பு
இது தொடர்பாக மோடி தனது உரையில் கூறி இருப்பதாவது:
டாக்டர் ஜெயச்சந்திரன் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எப்போதும் ஆர்வத்துடன் இருந்தார். இதேபோல 15,000 பெண்களுக்கு பிரசவம் பார்த்த கர்நாடக பெண் நரசம்மாவும் ஏழைகளுக்கு சேவை புரிந்துள்ளார்.

ஒற்றுமையின் அடையாளம் படேல்
உலகின் உயரமான சர்தார்படேல் சிலையானது இந்தியாவின் ஒற்றுமைக்கான ஆதாரமும் நமது பண்டிகைகள் கலாசாரத்தையும், விவசாயத்தையும் சார்ந்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

காப்பீட்டு திட்டம் அமல்
பண்டிகைகளில் எடுக்கப்படும் புகைப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் புகைப்படங்களை பகிர்வதால் இந்தியாவின் கலாச்சாரம், பன்முகத்தன்மையை அனைவரும் காணமுடியும். 2018ம் ஆண்டில் தான் உலகின் மிகப்பெரிய காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது.

கிராமங்களுக்கு மின்சாரம்
நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 95 சதவீத கிராமங்கள் தூய்மைப் படுத்தப்பட்டன. எளிதாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சி பயணம் வரும் ஆண்டிலும் தொடரும். குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications