என்ன ராகுல் காந்தி இந்திய குடிமகன் கிடையாதா? பிரியங்கா காந்தியின் மாஸ் ரெஸ்பான்ஸ்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள நோட்டீஸ் குறித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ள நோட்டீஸ் குறித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்து இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டனில் குடியுரிமை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 2015ல் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Priyanka Gandhi on MHA notice to Rahul Gandhi over citizenship row

ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று சுப்பிரமணியன் சாமி தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார். சுப்பிரமணியன் சாமியின் புகாரில், பிரிட்டனில் உள்ள பேக்ஆப்ஸ் என்ற நிறுவனத்தில் ராகுல் காந்தி முக்கிய பொறுப்பில் உள்ளார். அதில் ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது, என்று கூறி இருந்தார்.

ஆனால் இந்த புகாரை தேர்தல் ஆணையம் ஏற்கனவே மறுத்துவிட்டது. அதேபோல் 2015லேயே இந்த புகாரை உச்ச நீதிமன்றமும் பொய் என்று கூறி விட்டது. இந்த நிலையில் இதுகுறித்து தற்போது உத்தர பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதில் அளித்துள்ளார்.

அதில், இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு காமெடியாக உள்ளது. மொத்த இந்தியாவிற்கும் ராகுல் காந்தி ஒரு இந்தியர்தான் என்று தெரியும். அவர் இங்கேதான் பிறந்தார் என்பது தெரியும். அவர் வளர்ந்ததை கூட எல்லோரும் கண்கூடாக பார்த்தார்கள்.

அது ஏன் சிலருக்கு மட்டும் தெரியாமல் இருந்துள்ளது. அதை ஏன் இப்போது இவர்கள் கேள்வி எழுப்பி இங்கே வந்து இருக்கிறார்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை என்று, பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+