மாணவர்கள் மீது AK-47, கண்ணீர் புகை, தடியடி, ஏன்? அவர்கள் என்ன தீவிரவாதிகளா? பிரியங்கா காந்தி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் வினாத்தாள் லீக் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களின் போது போலீசார் நடத்திய நடவடிக்கைகள் குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். கண்ணீர் புகை குண்டு, தடியடி, பெல்லட் குண்டுகள் மற்றும் ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக கூறி பிரியங்கா காந்தி, மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? என்றும் கேள்வி எழுப்பினார்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் லீக் ஆகும்போது குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை தரும் மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது மாணவர்களின் ஜனநாயக உரிமையை அரசு ஒடுக்க முயன்றதாக குற்றம்சாட்டினார்.

Priyanka Gandhi on NEET Protest

பிரியங்கா காந்தி

நாடாளுமன்றத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "பிரதமர் நரேந்திர மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். மாணவர்கள் மீது ஏன் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது? தடியடி நடத்தப்பட்டது ஏன்? பெல்லட் கன் பயன்படுத்தப்பட்டது ஏன்? ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது ஏன்? மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? நாங்கள் அரசிடம் பதில் மட்டும்தான் கேட்கிறோம்" என்று அவர் பேசினார்.

போராட்டங்களின் போது பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அனுமதி வழங்கியது யார் என்பதை உள்துறை அமைச்சர் விளக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார். மேலும், போலீஸ் நடவடிக்கையின்போது மாணவிகள் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டிய பிரியங்கா, அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்றும் அதை ஒடுக்குவது பாவம் என்று குறிப்பிட்டார்.

மாணவர்களா? தீவிரவாதிகளா?

தொடர்ந்து பேசிய அவர், "போராடியவர்கள் அனைவரும் மாணவர்கள்.. தீவிரவாதிகள் அல்ல. நீட் வினாத்தாள் லீக் விவகாரத்தில் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் போராடினர். ஆனால், அவர்களுக்கு பதிலாக அடக்குமுறையே கிடைத்தது. நாடு முழுவதும் நடைபெற்ற நுழைவுத் தேர்வுகளில் இதுவரை 152 முறை வினாத்தாள்கள் முன்கூட்டியே லீக் ஆகியிருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு வழக்கில்கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. மாணவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த சிஸ்டம் அவர்களை மீண்டும் மீண்டும் தோல்வியடைய செய்கிறது.

குறையும் பட்ஜெட்

கல்விக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. நாட்டின் கல்வி அமைப்புகளில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. மாணவர்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி அமைப்பு சீர்குலைந்துள்ளது. அதேநேரம் கல்விக்கான நிதி ஒதுக்கீடும் ஆண்டுதோறும் குறைக்கப்பட்டு வருகிறது.

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார். ஆனால், பாஜக தலைமையகத்தில் அவரை ஏதோ வெற்றியாளர் போல முழக்கங்களுடன் வரவேற்றனர். இது எதை காட்டுகிறது? நான் காயமடைந்த மாணவர்களை சந்திக்க நேரடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது ஐசியுவுக்கு வெளியே அந்த மாணவியின் தாய் நின்று கொண்டிருந்தார். அவர் எந்த அரசியல் தலைவரையும் சந்திக்க விரும்பவில்லை. என் மகளின் இந்த நிலைக்கு காரணமானவர்கள் ஏன் இங்கு வருகிறார்கள்? என்று அவர் கேட்டார். அந்த தாயின் வேதனை என்னை வெட்கப்பட வைத்தது. அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.

அந்த தாய்க்காக நான் இப்போது பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் கேட்கிறேன். ஒரு அப்பாவி மாணவியின் மீது இவ்வளவு கொடூரமான அடக்குமுறையை நடத்த வேண்டிய அவசியம் என்ன? அமைதியாகப் போராடிய மாணவர்களிடம் ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பதில் சொல்லியே தீர வேண்டும்

மாணவர்கள் எதிர்கொண்ட துயரத்தை மத்திய அரசு உணர வேண்டும் என்றும் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார். பிரியங்கா காந்தி மேலும், "எதிர்க்கட்சிகள் கேட்பது மிக எளிமையான கேள்வி.. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திலும், அதற்கு எதிராக போராடிய மாணவர்களிடம் நடந்து கொண்ட விதத்திற்கும் அரசு பொறுப்பேற்க வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதை தான் நாங்கள் கேட்கிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+