இந்தியா கேட் பகுதியில் தொடரும் போராட்டம்.. பிரியங்கா காந்தி பங்கேற்பு
டெல்லி: இந்தியா கேட் பகுதியில் இரவு நேரத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரின் பெயர்களும், இலங்கை தமிழர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
முதன்முதலாக அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

போராட்டம்
டெல்லியில் புகழ்பெற்ற ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது போல் ஆங்காங்கே மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஏழை மக்கள்
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று மாலை வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில் குடியுரிமை சட்டம் பாரபட்சமானது. நாடு முழுவதும் மேற்கொள்ளவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பால் ஏழைமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்,

காட்டுமிராண்டித்தனம்
அரசின் இதுபோன்ற தவறான முடிவுகள், கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் தங்களது கருத்துகளை பதிவு செய்ய மக்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. மக்களை ஒடுக்குவது காட்டுமிராண்டித்தனமானது.

மாணவர்களை ஒடுக்கக் கூடாது
நீதிக்காக போராடும் மாணவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணையாக நிற்கும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் இரவு நேரத்திலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு நடந்த போராட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.
|
பிரியங்கா காந்தி பங்கேற்பு
அப்போது அவர் பேசுகையில் குடியுரிமை சட்டமும் மக்கள்தொகை கணக்கெடுப்பும் ஏழை மக்களுக்கு எதிரானது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் என்ன செய்வார்கள்? இதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் அமைதியாக நடைபெற வேண்டும் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications