‛‛பின்தங்கிய ராகுல் காந்தி’’.. காங்கிரஸில் அண்ணனை விட ‛மாஸ்’ காட்டும் பிரியங்கா காந்தி.. புது தகவல்
டெல்லி: இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை விட அவரது தங்கை பிரியங்கா காந்தி அதிக ‛மாஸ்’ காட்டிய தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடைசி மற்றும் 7 வது கட்ட லோக்சபா தேர்தல் இன்று நடந்து வருகிறது. மொத்தம் 57 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளது. அதன்பிறகு நாடே எதிர்பார்த்துள்ள லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜுன் 4ல் வெளியாக உள்ளது.

இந்த லோக்சபா தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். 2014, 2019 ஆகிய தேர்தல்களில் சந்தித்த தோல்வியில் இருந்து மீண்டு வந்து மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டியது அந்த கட்சிக்கு முக்கியம். இதனை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
தற்போது சோனியா காந்தி வயது முதிர்வு மற்றும் உடல்நல பிரச்சனையால் தேர்தலில் போட்டியிடவில்லை. அதோடு பிரசாரத்திலும் அவர் பெரிதாய் பங்கேற்கவில்லை. மாறாக சோனியாவின் மகனான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற மூத்த தலைவர்கள் தான் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசாரங்கள் அதிகம் கவனிக்கப்பட்டன.
‛‛50-55 சீட் தான்’’.. காங்கிரஸ் 100 தொகுதியை தொட வாய்ப்பே இல்லை.. இடியை இறக்கிய பிரசாந்த் கிஷோர்
இத்தகைய சூழலில் தான் லோக்சபா தேர்தலில் அண்ணன் ராகுல் காந்தியை பிரசாரத்தில் தங்கை பிரியங்கா காந்தி ‛ஒவர்டேக்' செய்துள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலையொட்டி ரோடு ஷோ, பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டம் என மொத்தம் 107 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
மாறாக ராகுல் காந்தியின் தங்கையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி 108 பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்று காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு சேகரித்துள்ளார். மொத்தம் 16 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம் செய்துள்ளார் இந்த பிரசாரத்தின்போது காங்கிரஸ் மீதான பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களின் விமர்சனத்துக்கு பிரியங்கா காந்தி தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார்.
அதோடு பிரியங்கா காந்தி 100க்கும் அதிகமான பேட்டிகள், ஒரு தொலைக்காட்சி நேர்க்காணல், 5 பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியை மீண்டும் பலமாக்கும் முயற்சியில் அண்ணன் ராகுல் காந்தியுடன் சேர்ந்து பிரியங்கா காந்தி தீவிரமாக ஈடுபட்டு வருவது உறுதியாகி உள்ளது.
குறிப்பாக பிரியங்கா காந்தி வடமாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதியில் 2 வாரம் அவர் பிரசாரம் செய்துள்ளார். இதில் ரேபரேலியில் சோனியா காந்திக்கு பதில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அமேதியில் கடந்த முறை ராகுல் காந்தி தோற்ற நிலையில் சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான கேஎல் சர்மா , மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து களமிறங்கி உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications