‛‛50-55 சீட் தான்’’.. காங்கிரஸ் 100 தொகுதியை தொட வாய்ப்பே இல்லை.. இடியை இறக்கிய பிரசாந்த் கிஷோர்
டெல்லி: நடந்து வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 100 இடங்கள் கூட பெறுமா என்பது கேள்விக்குறித்தான் என்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான முக்கிய காரணத்தையும் அவர் விளக்கி உள்ளார்.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டன. 7 வது மற்றும் கடைசி கட்ட லோக்சபா தேர்தல் ஜுன் 1ம் தேதி நடைபெற உள்ளது.

அதன்பிறகு ஜுன் 4ல் ஒரே கட்டமாக ஓட்டு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறதா? இல்லாவிட்டால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ‛இந்தியா' கூட்டணி ஆட்சியை பிடிக்கிறதா? என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில் தான் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது, ‛‛காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்லுமா'' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பிரசாந்த் கிஷோர், ‛‛காங்கிரஸ் 50 முதல் 55 இடங்களில் ஜெயிக்கலாம். இதில் எவ்வளவு தொகுதிகளை பெறுவார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னால் ஒன்றை கூற முடியும். காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளை வெல்லும் என நான் பார்க்கவில்லை. காங்கிரஸ் 100 இடங்களில் வென்றால் அது தேர்தலில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும். இதனால் 100 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும் என்ற கேள்விக்கே இடமில்லாத நிலை தான் உள்ளது.
ஏனென்றால் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் வென்றால் பாஜக 300 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருக்காது. இது சாதாரணமான கணக்கு. இதனால் காங்கிரஸ் கட்சி 3 இலக்க தொகுதிகளில் வெல்ல வாய்ப்பில்லை'' என தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் இந்த முறை எப்படியாவது 100க்கும் அதிக இடங்களில் வெல்லும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். காங்கிரஸ் கட்சி கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவிடம், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. அதன்பிறகு 2019 லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2014 தேர்தலை ஒப்பிடும்போது 8 சீட்டுகள் கூடுதலாக பெற்று 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
இதனால் இந்த தேர்தலில் வென்று ‛இந்தியா' கூட்டணிக்கு தலைமை தாங்கி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. ஆனால் தற்போதைய லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளை வெல்வது கேள்விக்குறி தான் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளது அந்த கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications