உளவுத்துறை அறிக்கையை படிப்பது யார்? தவெகவில் 3 நிழல் அதிகார மையங்கள்.. அதிமுக வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வருக்கு செல்லும் உளவுத்துறை அறிக்கையை 3 அதிகார மையங்கள் படிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் பார்வைக்கு மட்டுமே செல்ல வேண்டிய அறிக்கையை சட்டப்படி வேறு யாரும் படிக்கக் கூடாது என்று கூறியுள்ள ஆர்பி உதயகுமார், உளவுத்துறை அறிக்கையை அதிகார மையங்கள் படித்தால், அரசின் ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்தே அரசு அதிகாரிகளுக்கு நிழல் அதிகார மையங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனிடையே அமைச்சரவை கூட்டத்தில் விஜய்யின் நண்பரான விஷ்ணு ரெட்டி மற்றும் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Vijay

இதன் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேரடியாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து புகார் அளித்துள்ளன. இதனால் தவெக மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஜெகதீஷ் பழனிசாமி முதல்வரின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

அதுவே மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் இருவரும் பங்கேற்றுள்ளது விவாதமாக மாறியுள்ளது. இதனால் முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறினாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்னொரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதில் ஆர்பி உதயகுமார் பேசுகையில், முதல்வருக்கு செல்லும் உளவுத்துறை அறிக்கையை 3 அதிகார மையங்கள் படிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தல்வர் பார்வைக்கு மட்டுமே செல்ல வேண்டிய அறிக்கையை சட்டப்படி வேறு யாரும் படிக்கக் கூடாது. உளவுத்துறை அறிக்கையை அதிகார மையங்கள் படித்தால், அரசின் ரகசியங்கள் வெளியே கசிய வாய்ப்பு உள்ளது.

அதிமுகவை அழிப்பதில் மட்டுமே விஜய் கவனம் செலுத்துகிறார். அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து அமைச்சர் பதவி வழங்குவது அதிமுகவை அபகரிக்கும் ரகசிய திட்டம். அதிகார ஆசைக்காக கட்சியை விட்டுச் செல்வோர் தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+